கம்பராமாயணம் 2126 · அயோத்தியா 8.4
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
வடம் கொள் பூண் முலை மயிலே! - முத்துவடமாகக் கொள்ளப் பெற்ற அணியை அணிந்த தனங்களையுடைய இளைய மயில் போன்றவளே!; மதம் கத மா - மதம் பிடித்த சீற்றமுள்ள யானைகள்; அடங்கு பேழ் வயிற்று அரவு உரி - உள்ளே அடங்கிய பெரிய வயிற்றை உடைய மலைப்பாம்புகள் உரித்த தோல்கள்; தடங்கள் தோறும் - மலையின் தாழ் வரைகளில் எல்லாம் உள்ள; அமைதொறும் - மூங்கில்கள் தோறும்; தொடக்கி - பிணித்து; நின்று ஆடுவ - அங்கேயே இருந்து ஆடுகின்றன; தண்டலை அயோத்தி - சோலை சூழ்ந்த அயோத்தி மாநகரத்தில்; நுடங்கு - ஆடுகின்ற; மாளிகைத் துகில் கொடி நிகர்ப்பன - மாளிகைகள் மேல்கட்டப்பெற்ற வெண்மையான நிறமுள்ள துணிக் கொடிகளை ஒத்துள்ளன; நோக்காய் - காண்பாயாக.
யானைகளையும் விழுங்கும் வயிற்றை உடைய மலைப்பாம்புகள் உரித்த தோல்கள் மிகப்பெரிதாக இருக்கும் ஆதலால், அவை துகில் கொடிகளை ஒத்துள்ளன என்றாராம். “குஞ்சரம் கோள் இழைக்கும் பாம்பு” (திருக்கோவையார். 21.)
ஆங்கிலம் · English translationAI
Translation
- O young peahen whose breasts wear strings of pearls! The skins sloughed by pythons
- whose huge bellies swallow even raging, rut-maddened elephants, caught on the bamboos,
- sway in every valley, like the cloth banners that flutter
- on the mansions of grove-girt Ayōtti: look!
What the poem says
On the mountainsides hang the shed skins of pythons big enough to swallow elephants, snagged on the bamboo and stirring in the wind.
To Irāmaṉ they look like the white cloth flags that wave over the mansions of Ayōtti, a passing reminder of the city they have left behind. The commentary cites the Tirukkōvaiyār for the image of serpents that seize elephants.