கம்பராமாயணம் 2127 · அயோத்தியா 8.5

Section அயோத்தியா காண்டம் / 8. சித்திரகூடப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1உவரிவாய் அன்றிப் பாற்கடல் உதவிய அமுதே !
துவரின் நீள் மணித் தடம் தொறும் , இடம் தொறும் , துவன்றிக்
கவரி பால் நிற வால் புடை பெயர்வன கடிதில்
பவள மால் வரை அருவியைப் பொருவிய பாராய் .

பொருள் · Meaning in Tamil

உவரி வாய் அன்றிப் பாற்கடல் உதவிய அமுதே! - உப்புக் கடல் அல்லாமல் சுவை இனிதாகிய திருப்பாற்கடல் தந்த அமுதம் போன்றவளே! துவரின் நீள் மணித் தடந் தொறும் இடம் தொறும் துவன்றி - பவள மணியால் ஆகிய மலைத் தாழ்வரைகளிலும் மற்றும் உள்ள இடங்களிலும் நெருங்கி; கவரி மான் - கவரிமான்களின்; நிறவால் - வெண்ணிறம் உடைய வால்கள்; புடை பெயர்வன - அசைகின்றனவாகிய அவை, கடிதின் - வேகமாக ஓடுகின்ற; பவள மால் வரை அருவியைப் பொருவிய - பவள மலையின் மேலிருந்து வீழ்கின்ற வெண்ணிற அருவிகளைப் போன்றுள்ளன; பாராய் - காண்பாயாக.

கவிஞர்கள் பாற்கடலையும் உவர்க்கடலையும் கடல் என்னும் சாதி பற்றி ஒன்றாகவே கொண்டு “கடலில் தோன்றியவள்” என்று பொதுவாகத் திருமகளைக் கூறுவராதலின், இங்கு “உவரி வாய் அன்றிப் பாற்கடல் உதவிய அமுதே” என்றாராம். 'துவரின் நீள்மணி' என்பதற்குத் துவர் போல நீண்ட மணி என்றும், துவரினும் ஒளியுடைய மணி என்றும் பொருள் உரைக்கலாம். துவர் - பவளம்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. O nectar, given not by the salt sea but by the sea of milk!
  2. Crowding in every jewelled valley of coral and every open place,
  3. the yaks swing their milk-white tails from side to side, and they
  4. rival the swift cascades of the great coral mountain: see!

What the poem says

Irāmaṉ calls Cītai the nectar of the milk ocean. Poets usually say only that Tirumakaḷ (Lakṣmī), of whom Cītai is an incarnation, rose "from the sea", treating the salt sea and the milk sea as one. Here Irāmaṉ insists it was the sweet milk ocean, not the salty one.

He points to herds of yak among the coral-red rocks, their white tails swinging. Against the red stone they look like white waterfalls tumbling down a coral mountain.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1uvarivāy aṉṟip pāṟkaṭal utaviya amutē!
tuvariṉ nīḷ maṇit taṭamtoṟum, iṭamtoṟum, tuvaṉṟi
kavari pāl niṟa vāl puṭai peyarvaṉa kaṭitiṉ
pavaḷa māl varai aruviyaip poruviya pārāy.