கம்பராமாயணம் 2129 · அயோத்தியா 8.7
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
நீண்ட மால் வரை - மிக உயர்ந்த பெரிய மலையிலே; மதி உற - சந்திரன் வந்து பொருந்த; நிவந்த நெடுமுடி - மிக உயர்ந்த அம் மலை உச்சியிலே; தூண்டும் மாமணிச் சுடர் - தூண்டி எரியவிடப்பட்டது போலப் பிரகாசிக்கின்ற பெரிய மணிக் கற்களின் ஒளியானது; சடைக் கற்றையின் தோன்ற - சிவபிரானது சடைத் தொகுதியைப் போல விளங்க; மாண்ட வால் நிற அருவி - (அம் மலை உச்சியிலிருந்து விழும்) மாட்சிமை பொருந்திய வெண்ணிறம் படைத்த அருவியானது; அம் மழவிடைப் பாகன் - அந்த இளமையான இடபத்தை ஏறிச் செலுத்துபவன் ஆகிய சிவபிரானது; காண்தகும் - அழகு பொருந்திய; சடைக் கங்கையை - சடை முடியில் உள்ள கங்கையை; நிகர்ப்பன - ஒத்திருப்பனவற்றை; காணாய் - பார்ப்பாயாக.
மலை சிவபிரான். மதி பொருந்தல் சிவபிரான் பிறை சூடியது போலத் தோன்றல். செம்மணிச்சுடர் - செஞ்சடைக்கற்றை. வால்நிற அருவி - சடையில் உள்ள கங்கை என உவமை காண்க.
ஆங்கிலம் · English translationAI
Translation
- As the moon comes to rest on the tall great mountain, and on its lofty peak
- the glow of great gems, bright as a kindled flame, shows like a mass of matted locks,
- the splendid white waterfalls look like the Kaṅkai, lovely to behold,
- in the matted hair of him who rides the young bull: see!
What the poem says
The whole mountain becomes an image of the god Civaṉ (Śiva), "he who rides the young bull".
The moon resting on its summit is the crescent he wears in his hair; the red glow of gems on the peak is his mass of reddish matted locks; and the white waterfall pouring down is the river Gaṅgā, which he caught in his hair as she fell from heaven.