கம்பராமாயணம் 2130 · அயோத்தியா 8.8

Section அயோத்தியா காண்டம் / 8. சித்திரகூடப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

தொட்ட - (யானை) கைக்கொண்ட; வார்சுனை - நீண்ட சுனை நீர்; சுடர் ஒளி மணியொடும் தூவி விட்ட சென்றன - (தம்மேல்) தூவிவிட்ட ஒளி மிக்க மணிகளொடும் சென்றனவாகிய; விடா மத மழை அன வேழம் - விடாத மதநீர்ப் பெருக்கால் மழையோ எனக் கருதத் தக்க யானைகள்; வட்ட - பாறை வட்டத்தில் உள்ள; வேங்கையின் மலரொடும் ததைந்தன - வேங்கைப் பூவின் பொன்னிற மலர்களொடும் கூடி நெருங்கியமையால்; வயங்கும் - விளங்கும்; பட்டம் - பொன்னாலும் மணியாலும் இயன்ற பட்டம்; நெற்றியில் சுற்றிய போல்வன - நெற்றியில் சுற்றப்பட்டனபோல்வனவாய் உள்ளன; பாராய் - பார்ப்பாயாக.

சுனையின்கண் ஆடிய யானைகள் சுனை நீர் தூவிய மணிகளைத் தம் நெற்றியில் கொண்டன; பின்னர்ப் பாறை வட்டத்தில் உள்ள பொன்னிறமான வேங்கை மலர்கள் அந்நெற்றியில் நெருங்கிச் சேர்ந்தன. அதனால் நெற்றிப் பட்டம் அணிந்தவை போலத் தோன்றின என்றது தற்குறிப்பேற்றவணியாம்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Having sprayed themselves with water from the long pool, bright gems and all,
  2. the elephants, pouring unceasing rut like rain, went on;
  3. and with the vēṅkai blossoms of the round rock pressed upon them,
  4. they look as if shining frontlets had been bound about their brows: behold!

What the poem says

Elephants bathing in a mountain pool spray themselves with water that carries glittering gems from the pool's bed. Then they brush against the golden vēṅkai (kino tree) blossoms on a rock.

Gems and gold flowers stick to their foreheads, so that they seem to wear the jewelled gold frontlets put on royal elephants. The commentary names the figure as taṟkuṟippēṟṟam, poetic fancy that gives an imagined cause to a natural scene.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1toṭṭa vār cuṉai cuṭar oḷi maṇiyoṭum tūvi
viṭṭa ceṉṟaṉa, viṭā mata maḻai aṉa vēḻam,
vaṭṭa vēṅkaiyiṉ malaroṭum tataintaṉa vayaṅkum
paṭṭam neṟṟiyil cuṟṟiya pōlvaṉa pārāy!