கம்பராமாயணம் 2131 · அயோத்தியா 8.9
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
இழைந்த நூல் - ஓர் இழையாக அமைந்த நூலானது; இணைமணிக் குடம் சுமக்கின்றது என்ன - இரண்டு மணிக்கற்கள் அழுத்திய குடத்தைச் சுமக்கின்றது என்று சொல்லுமாறு; குழைந்த - ஒல்கித் தளருகின்ற; நுண் இடை - நுண்ணிய இடையையும்; குவி இள வனமுலைக் கொம்பே! - திரண்ட இளமையான அழகிய தனங்களையும் உடைய பூங்கொம்பு போன்றவளே!; தழைந்த சந்தனச் சோலை - தழைத்து மிகுந்துள்ள சந்தனமரச் சோலையானது; தன்செலவினைத் தடுப்ப - (மதியாகிய) தன்னுடைய வானத்திற் செல்லும் செலவினைத் தடுத்தலான்; நுழைந்து போகின்றது ஒக்கின்ற - அந்தச் சோலைக்குள் புகுந்து போவதை ஒத்திருக்கின்ற; மதியினை - சந்திரனை; நோக்காய் - பார்ப்பாயாக.
காம்புடைய நகில்கள் உச்சியில் நீலமணி அழுத்திய குடம் போன்றனவாதலின் மணிக்குடம் என்றார். வானத்திற் செல்லும் சந்திரன் அடர்த்தியாகவுள்ள சந்தனச் சோலையில் உள்புகுந்து செல்வதைப் போன்றுள்ளது என்றது தற்குறிப்பேற்றவணியாம். தழைத்த என்பது தழைந்த என மெலிந்தது.
ஆங்கிலம் · English translationAI
Translation
- O flowering bough, whose slender waist sways as if a single twisted thread
- were carrying a pair of jewelled pots, with full young lovely breasts!
- Look at the moon, which seems to be slipping through
- the dense sandal grove that stands in its way.
What the poem says
Night has come. Irāmaṉ praises Cītai's beauty in the conventional terms of Tamil poetry: a waist so slender it seems like a thread carrying two jewelled pots.
He then shows her the moon gliding behind a thick grove of sandal trees. Poetically, the grove blocks the moon's path across the sky, so the moon has to squeeze through it, another instance of fanciful cause given to a natural sight.