கம்பராமாயணம் 2132 · அயோத்தியா 8.10
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
பிறை மருப்பு ஒரு யானை - பிறைமதி போன்ற தந்தத்தை உடைய ஒரு களிற்றியானை; பெருகு சூல் இளம் பிடிக்கு - முதிர்ந்த கருப்பத்தையுடைய இளைய (தன்) பெண் யானைக்கு; உருகு காதலின் - மனம் உருகுதற்குக் காரணமான அன்பினால்; தழை கொண்டு மழலை வண்டு ஓச்சி - தழைகளைக் கொண்டு இனிய குரல் உடைய வண்டுகளை ஓட்டி; முருகு நாறு - மணம்வீசுகின்ற; செந்தேனினை - ; முழை நின்றும் வாங்கி - மலைக் குகையிலிருந்தும் எடுத்து; வாயினில் பருக - வாயால் பருகும்படி; கையின் நின்று - தனது கையிலிருந்து; அளிப்பது - கொடுப்பதனை; பாராய் - காண்பாயாக.
சிறிதே வளைந்த தந்தம் பிறை மதி போலும், யானை இனங்களின் அன்புச்செறிவை இப்பாடல் மூலம் அறியலாம். “பெருகு மதவேழம் மாப்பிடிக்கு முன் நின்று, இரு கண் இளமூங்கில் வாங்கி - அருகிருந்த, தேன் கலந்து நீட்டும் திருவேங்கடம்”, “வரை செய் மாக்களிறு இள வெதிர வளர்முளை அளைமிகுதேன் தோய்த்துப், பிரசவாரி தன்னிளம் பிடிக்கு அருள் செய்யும் பிரிதி” (திவ்ய. 2256, 962.) என்னும் ஆழ்வார் திருமொழிகள் இங்கு ஒப்பு நோக்கத்தக்கன.
ஆங்கிலம் · English translationAI
Translation
- With melting love, driving off the softly humming bees with a leafy branch,
- taking the fragrant red honey from a cleft in the rock,
- a tusker with crescent-moon tusks, for his young mate heavy with young,
- holds it out from his trunk for her to drink: see!
What the poem says
A tender scene: a bull elephant, his tusks curved like the crescent moon, waves a leafy branch to drive away the bees, takes honey from a rock crevice, and feeds it from his trunk to his pregnant mate.
The commentary compares two verses of the Vaiṣṇava saints (Āḻvārs), which describe elephants on the sacred hills of Vēṅkaṭam and Piriti offering honey-dipped bamboo shoots to their mates.