கம்பராமாயணம் 2133 · அயோத்தியா 8.11

Section அயோத்தியா காண்டம் / 8. சித்திரகூடப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1அளிக்கும் நாயகன் மாயை புக்கு அடங்கினன் எனினும் ,
களிப்பில் இந்தியத்து யோகியைக் கரக்கிலன் அதுபோல்
ஒளித்து நின்று உளர் ஆயினும் , உருத் தெரிகின்ற
பளிங்கு அறை சில பரி முகம் மாக்களை பாராய் .

பொருள் · Meaning in Tamil

அளிக்கும் நாயகன் - (உலகினைக்) காக்கும் தெய்வமாகிய திருமால்; மாயை புக்கு அடங்கினன் எனினும் - மாயையில் புகுந்து (தன் தன்மை பிறர்க்கு அறிய முடியாதபடி) மறைந்து அடங்கி நின்றான் என்றாலும்; களிப்பு இல் இந்தியத்து - புலன் வழி சென்று களித்தல் இல்லாத பொறிகளை உடைய; யோகியை - யோக சித்தியால் சிறந்த தவத்தரை; கரக்கிலன் - ஒளிக்க மாட்டான்; அதுபோல் - அதுபோலவே; ஒளித்து நின்றுளர் ஆயினும் - உலகத்தார்க்குத் தம்மைக் காட்டாது ஒளித்து நின்றிருக்கின்றார்கள் ஆனாலும்; உருத் தெரிகின்ற பளிக்கு அறை - தம்மிடத்தே உள்ளவற்றின் உருவத்தைத் தெளிவாகக் காட்டுகின்ற பளிங்குப்பாறையிலே (காணத் தோன்றும்); சில பரிமுக மாக்களை - சில குதிரை முகம் உடைய கின்னரர்களை; பாராய் - பார்ப்பாயாக.

திருமால் மாயையால் மறைந்து நின்று பிறரால் அறிய வொண்ணா விடினும், யோகியர்க்கு அவன் தன்னை மறையான். பரமன் மாயையால் ஒளித்தவன் என்பதைக் கருடன் துதியால் (8252 - 62) உணர்க. பரிமுக மாக்கள் - குதிரை முகம் உடையவர் கின்னரர் ஆவர். உலகோர்க்குத் தம்மைக் காட்டாது மறைப்பர் ஆயினும், பளிங்குப் பாறையில் அவர் உரு வெளித்தோன்றும் என்க. பளிங்கில் மறைந்த உருத் தோன்றுதலை மணிமேகலை பளிக்கறை புக்க காதையான் உணர்க.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Though the Lord who protects us has entered into māyā and lies hidden,
  2. he does not hide himself from the yogi whose senses seek no pleasure; just so,
  3. though they keep themselves hidden, their forms show through
  4. in the crystal caves: look at these horse-faced beings!

What the poem says

Irāmaṉ points to the kiṉṉarar, celestial beings with horses' faces, who hide from human sight. Hidden in caves of crystal, their shapes still show through the clear stone.

He compares them to Viṣṇu, who hides himself behind the veil of māyā (illusion) yet cannot stay hidden from a yogi who has mastered the senses. There is an unspoken irony, since Irāmaṉ himself is that hidden god. The commentary also recalls the crystal chamber episode in the Maṇimēkalai, where a figure hidden inside crystal can still be seen.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1aḷikkum nāyakaṉ māyai pukku aṭaṅkiṉaṉ eṉiṉum,
kaḷippu il intiyattu yōkiyaik karakkilaṉ atupōl
oḷittu niṉṟuḷar āyiṉum, urut terikiṉṟa
paḷikku aṟaic cila parimuka mākkaḷaip pārāy.