கம்பராமாயணம் 2134 · அயோத்தியா 8.12
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
ஆடுகின்ற மா மயிலினும் அழகிய குயிலே! - (கார் கண்டு களிப்புற்றுத் தோகை விரித்து) ஆடுகின்ற சிறந்த மயிலைக்காட்டிலும் (சாயலால்) அழகுடைய குயில்போலும் குரல் உடையவளே!; கொடிச்சியர் - குற மகளிர்; தம் மனம் கொதிப்ப ஊடுகின்றனர் - தம் மனம் கொதிக்கின்றபடியால் (கணவர் மேல்) ஊடல் கொண்டவராய்; கூடுகின்றிலர் - (கணவரைக்) கூடாமல் இருக்கின்ற அவர்; கொழுநரை - தம் கணவரை; உருகினர் - (தாமே) அன்பினால் உருகியவர்களாய்க் (கூடுதற்குறிப்பினால்); நோக்க - பார்க்கும்படி; கின்னர மிதுனங்கள் - ஆணும் பெண்ணுமாய் இணைந்திருக்கும் கின்னரமிதுனங்கள்; பாடுகின்றன; பாராய் -.
ஊடலாற் பிரிந்த குறத்தியரைக் கணவர்பால் தம் பாடலாற் கின்னர மிதுனங்கள் சேர்த்துவைப்பனவாயின என்பது கருத்து. கின்னர மிதுனம் - மனித முகமும் குதிரை உடலும் உடைத்து ஆணும் பெண்ணுமாய் இணைந்தே இருந்து கின்னரம் என்னும் இசைக்கருவி கொண்டு பாடும் தன்மை உள்ள தேவசாதியினர்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- O cuckoo, lovelier than the great dancing peacock!
- The hill-women, hearts burning, will not go to their husbands;
- they sulk; yet they melt and look upon their men
- as the kiṉṉara couples sing: behold!
What the poem says
The women of the hill tribes are sulking in a lovers' quarrel (ūṭal) and refuse their husbands.
But the kiṉṉaras, celestial musicians who always go about as couples and sing to the kiṉṉaram lute, sing so sweetly that the women's anger melts. They begin to look at their husbands with love, and the couples are reconciled.