கம்பராமாயணம் 2135 · அயோத்தியா 8.13
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
வில்லி வாங்கிய சிலை எனப் பொலிநுதல் விளக்கே! - வில்லுடைய வீரன் வளைத்த வில்போன்ற புருவத்தால் விளங்குகின்ற நெற்றியை உடைய விளக்குப் போன்றவளே!; வல்லிதாம் - கொடிகள்; கழை தாக்கலின் - மூங்கில் மோதுவதால்; வழிந்து இழி பிரசம் - தம்மிடத்துள்ள தேனடை கெட்டு இழிகின்ற தேனானது; கொல்லி வாங்கிய குன்றவர் - கொல்லிப் பண்ணைக் கேட்கின்ற குறவர்கள்; நெடுங் கொடிக் கவலை - நீண்ட கொடிகளை உடைய கவலைக் கிழங்கை; கல்லி - தோண்டி; வாங்கிய - எடுத்த; குழிகளை - பள்ளங்களை; நிறைப்பன - நிறைக்கும் தன்மையை; காணாய் - பார்ப்பாயாக.
வில்லி - வேட்டுவருள் ஒரு சாதியினர் எனலும் ஆம். கொடிகளில் கட்டப்பெற்ற தேனடையை மூங்கில்கள் மோதித் தாக்க அத்தேனடை கெட்டுத் தேன் வழிந்து கவலைக் கிழங்கு அகழ்ந்த குழியைத் தூர்த்து நிரப்பும் என்க. கொல்லிப்பண் மருதயாழ்த் திறமாதலின் மலை நிலத்தவர்க்கு ஏலாதாயினும் இங்கே அப்பண் கேட்ட எனப் பொருள்படுதலன்றி “எழுப்பிய எனப் பொருள் படுதல் இன்று ஆதலின் அமையும் என்க. கொடி நெடுங்கவலை - நெடுங் கொடிக் கவலை எனக் கொள்ளப்பட்டது.
ஆங்கிலம் · English translationAI
Translation
- O lamp, whose brow shines beneath a brow curved like a bow an archer has drawn!
- The honey that streams and drips as the bamboos knock against the creepers
- fills the pits that the hill-men, listening to the kolli melody, dug as they grubbed up
- the long-vined kavalai roots: see!
What the poem says
Swaying bamboo knocks against creepers that hold honeycombs. The combs break, and the honey runs down into the pits left where the hill folk dug up kavalai yams.
The hill-men are said to be listening to the kolli melody. The commentary notes that this mode properly belongs to the farmland (marutam) tradition, so it reads "listening to" rather than "playing".