கம்பராமாயணம் 2136 · அயோத்தியா 8.14

Section அயோத்தியா காண்டம் / 8. சித்திரகூடப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

ஒருவு இல் பெண்மை என்று உரைக்கின்ற உடலினுக்கு உயிரே - நீங்காத பெண்மை என்று சொல்லப்படும் ஓர் உடலுக்கு உயிர் போலச் சிறந்தவளே! மருவு காதலின் - மிகுந்த அன்புடன்; இனிது - இன்பமாக; உடன் ஆடிய மந்தி - ஆண் குரங்காகிய தன்னோடு நீராடிய பெண்குரங்கு; அருவி நீர் கொடு வீச - அருவி நீரைக் கொண்டு (தன்மேல்) தூவ; தான் - (ஆண் குரங்கு); அப்புறத்து ஏறி - மலையின் மற்றொரு பக்கத்தில் மேல் ஏறி; கருவி மாமழை - தொகுதி கொண்ட பெரிய மேகத்தை; உதிர்ப்பது - நீரைச் சிந்தச் செய்வதாகிய; ஓர் கடுவனை - ஓர் ஆண்குரங்கை; காணாய் -.

நீராடுகிற போது மந்தி அருவி நீரைத் தூவ, கடுவன் மலைமேல் ஏறி மேக நீரை அம்மந்திமேல் வீசி ஆண்மை காட்டியதென்க. கருவி - தொகுதி எனப் பொருள்படும் உரிச்சொல் “கருவி தொகுதி' (தொல். சொல். உரி. 56.) இங்குத் தொகுதியாவது இடி மின்னல் முதலியவற்றின் கூட்டம், பெய்யும் மேகம் என்றவாறாம். கடுவன் - ஆண் குரங்கு. மந்தி - பெண் குரங்கு. இக்காலத்துப் பேர் உருவுடைய ஆண் குரங்கை 'மந்து' என வழங்கல் உலகவழக்கு.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. O life of the body that is called unfailing womanhood!
  2. When the female monkey, playing with him sweetly in clinging love,
  3. splashed him with water from the falls, he climbed to the far side
  4. and made the great massed cloud shed its rain: see that male monkey!

What the poem says

Irāmaṉ calls Cītai the very life of womanhood. He shows her a pair of monkeys playing in a waterfall.

The female splashes her mate with water from the falls. Not to be outdone, the male climbs higher up the mountain, shakes a heavy rain cloud, and showers her with its rain, showing off his strength.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1oruvu il peṇmai eṉṟu uraikkiṉṟa uṭaliṉukku uyirē!
maruvu kātaliṉ iṉitu uṭaṉ āṭiya manti,
aruvi nīrkoṭu vīcat tāṉ ap puṟattu ēṟi
karuvi mā maḻai utirppatu ōr kaṭuvaṉaik kāṇāy!