கம்பராமாயணம் 2137 · அயோத்தியா 8.15
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
வீறு பஞ்சினில் அமிழ்த நெய் மாட்டிய விளக்கே! - மிகச் சிறந்த பஞ்சினால் ஆகிய திரியில் தேவர் அமிழ்தமாகிய நெய்யை ஊற்றி ஏற்றப்பட்ட விளக்குப் போன்றவளே; சீறு வெம் கதிர் செறிந்தன - இருளைச் சீறி அழிக்கின்ற வெம்மையான ஒளி செறிந்தனவும்; பேர்கல - (தம் இடத்தை விட்டு எப்பொழுதும்) நீங்காதனவும்; திரியா - சுற்றி இயங்காதனவும் ஆகிய, மாறு இல் மண்டிலம் நிரம்பிய - வேறுபடுதல் இல்லாத வட்டமாக நிரம்பிய; மாணிக்க மணிக்கல் பாறை - மாணிக்க மணியால் ஆகிய கற்பாறைகள்; மற்று ஒரு பரிதியின் பொலிவது - வேறு ஒரு சூரியன் போல விளங்குவதை; பாராய் -.
அமுத நெய்' என்றது பிராட்டியின் சிறப்புக் கருதி. பிராட்டியைச் சிறப்பித்துக் கூறும் இடங்களில் அமுதத்தை எடுத்துக் காட்டல் கம்பர் வழக்கு. “ஆதரித்து அமுதில் கோல் தோய்த்து ” “தேவு தெண்கடல் அமிழ்து கொண்டு ” (483, 5079.) என்பன ஒப்பு நோக்கத் தக்கன. சூரியனுக்கும், மாணிக்க மணிக் கற்பாறைக்கும் ஒற்றுமை கூறியவர், பெயர்ந்து திரியும் சூரியன் போல் அன்றி, பெயர்ந்து திரியாது மாணிக்க மணிக்கல் பாறை என்று வேறுபாடும் கூறினார் வேற்றுமையணி.
ஆங்கிலம் · English translationAI
Translation
- O lamp lit with the ghee of nectar on a wick of the finest cotton!
- Dense with fierce hot rays, never leaving their place, never circling,
- perfect orbs that never wane, the ruby boulders
- shine like a second sun: behold!
What the poem says
Irāmaṉ likens Cītai to a lamp burning ambrosia for oil, a mark of how precious she is; the poet regularly brings in nectar when praising her.
He shows her great round boulders of ruby blazing like a second sun. The comparison carries a contrast, the figure called vēṟṟumai aṇi: unlike the real sun, these suns never move from their place and never travel round the sky.