கம்பராமாயணம் 2138 · அயோத்தியா 8.16

Section அயோத்தியா காண்டம் / 8. சித்திரகூடப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1சீலம் இன்னது என்று அருந்ததிக்கு அருளிய திருவே !
நீல வண்டு இனம் படிந்து எழ , வளைந்தன நிமிர்வ
கோல வேங்கையின் கொம்பர்கள் , பொன் மலர் தூவிக்
காலில் நிற்று தொழுது எழுவன நிகர்ப்பன காணாய் !

பொருள் · Meaning in Tamil

சீலம் இன்னது என்று அருந்ததிக்கு அருளிய திருவே! - (கற்புடைய மடந்தையரின்) நல்லொழுக்கம் இவ்வாறானது என்று அருந்ததிக்குக் காட்டிய திருமகளே!; கோல வேங்கையின் கொம்பர்கள் - அழகிய வேங்கை மரத்தின் பூங்கிளைகள்; நீல வண்டினம் படிந்து எழ - நீல நிறமான வண்டுக் கூட்டங்கள் தம்மேல் உட்கார்ந்து எழுதலினால்; வளைந்து உடன் நிமிர்வ - கீழே வளைந்து பிறகு மேலே நிமிர்வன; பொன்மலர் தூவி - பொன்னிற மலர்களைத் தூவி; காலினில் - பாதங்களில்; தொழுது எழுவன - வணங்கி எழுகின்றவற்றை; நிகர்ப்பன - ஒத்திருக்கும் அவற்றை; காணாய்.

பிராட்டியின் திருவடிகளில் பொன்னிறமான வேங்கை மலர்களைத் தூவி வழிபட்டு எழுவன என்றதனால் இது தற்குறிப்பேற்றவணியாம்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. O Tiru, who taught Aruntati what true virtue is!
  2. The lovely vēṅkai boughs bend as swarms of blue bees settle and rise,
  3. then spring upright again, scattering golden blossoms;
  4. they seem to bow in worship at your feet and rise: see!

What the poem says

Irāmaṉ hails Cītai as Tiru (Lakṣmī), the model from whom even Aruntati, the star of wifely faithfulness, learned what virtue is.

Bees land on the flowering vēṅkai branches, bending them low, then fly off so the branches spring back. Each time the branches shed golden flowers at Cītai's feet. Irāmaṉ fancies them as worshippers who bow, offer flowers at her feet, and rise again.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1cīlam iṉṉatu eṉṟu aruntatikku aruḷiya tiruvē!
nīla vaṇṭiṉam paṭintu eḻa, vaḷaintu uṭaṉ nimirva
kōla vēṅkaiyiṉ komparkaḷ, poṉ malar tūvik
kāliṉil toḻutu eḻuvaṉa nikarppaṉa kāṇāy!