கம்பராமாயணம் 2139 · அயோத்தியா 8.17

Section அயோத்தியா காண்டம் / 8. சித்திரகூடப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1வில்கொள் வாள் நுதல் விளங்கு இழை இளம் தளிர் கொழுந்து ஏ !
எல் கொள் மால் வரை உம்பரின் , இரும் புனம் காக்கும்
கொல் கொள் வேல் கணார் குரீஇ இனத்து எறி குருவிந்தக்
கற்கள் , வானிடை மீன் என விழுவன காணாய் !

பொருள் · Meaning in Tamil

வில் கொள் வாள் நுதல் விளங்கு இழை, இளம் தளிர்க் கொழுந்தே! - வில்லாகிய புருவத்தைக் கொண்ட ஒளிபடைத்த நெற்றியையும், விளங்கிய அணிகலன்களையும் உடைய, இளைய தளிரின் கொழுந்து போன்றவளே!; எல் கொள் மால் வரை உம்பரின் - சூரியனைக்கொண்ட பெரிய மலையின் உச்சியில்; இரும் புனம் காக்கும் - பெரிய தினைப்புனத்தைக் காக்கின்ற; கொல்கொள் வேல் கணார் - கொலைத்தொழில் கொண்ட வேல்போன்ற கண்களை உடையவர்களாய குறமகளிர்; குரீஇ இனத்து எறி - (தினையைக் கவர வருகின்ற) குருவிக் கூட்டத்தின்மேல் வீசி எறிகின்ற; குருவிந்தக் கற்கள் - (செந்நிறம் உடைய) குருவிந்த மணிக் கற்கள்; வானிடை - ஆகாயத்தில்; மீன் என - நட்சத்திரம் போல; வீழ்வன - விழுவனவற்றை; காணாய் -.

குருவிந்தம் - ஒருவகை மாணிக்கக் கல்; செந்நிறம் உடையது. “பதுமமும் நீலமும் விந்தமும் படிதமும்” என்ற சிலப்பதிகார (மதுரைக். ஊர்காண். 1806 -7.) அடிகளுக்கு, “விந்தம் - குருவிந்தம்' இரத்தவிந்து என்பதும் அது;...... 'திலகமுலோத்திரம் செம்பருத்திப்பூக்களின் மலர் குன்றி முயலுதிரமே, சிந்துரம் குக்கில் கண் என எட்டும், எண்ணிய குருவிந்தம் கண்ணிய நிறமே' என்ற அடியார்க்கு நல்லார் உரையானும் உணரலாம்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. O tender young shoot, with bright jewels and a shining brow that bears a bow!
  2. On the summit of the great mountain that holds the sun, the women who guard the wide fields,
  3. with eyes like killing spears, fling kuruvintam stones at the flocks of sparrows,
  4. and they fall through the sky like stars: see!

What the poem says

On the hilltops the hill women guard their millet fields from birds by throwing stones at them. Here the stones they throw are kuruvintam, a kind of red ruby, so plentiful that they are used as pebbles.

As the bright red gems arc through the air and fall, they look like falling stars. The commentary cites an old gloss on the Cilappatikāram identifying the stone and listing the eight reds it is compared to.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1vil koḷ vāḷ nutal viḷaṅku iḻai iḷan taḷirk koḻuntē!
el koḷ māl varai umpariṉ, irum puṉam kākkum
kol koḷ vēl kaṇār kurīi iṉattu eṟi kuruvintak
kaṟkaḷ, vāṉiṭai mīṉ eṉa vīḻvaṉa kāṇāy!