கம்பராமாயணம் 2140 · அயோத்தியா 8.18

Section அயோத்தியா காண்டம் / 8. சித்திரகூடப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1வரிகொள் நோன் சிலை வயவர் தம் கணிச்சியின் மறிந்த
பரிய கார் அகில் சுட , நிமிர் பசும் புகைப் படலம் ,
அரிய வேதியர் ஆகுதிப் புகையொடும் அளவிக்
கரிய மால்வரைக் கொழுந்து என படர்வன காணாய் .

பொருள் · Meaning in Tamil

வரிகொள் ஒண்சிலை வயவர் - கட்டமைந்த ஒள்ளிய வில்லை உடைய வீரர்கள்; தம் கணிச்சியின் மறித்த - தம்முடைய கோடாலிப் படையால் வெட்டி வீழ்த்திய; பரிய கார் அகில் சுட - பருத்த கரிய நிறமுள்ள அகில் கட்டையைச் சுடுதலால்; நிமிர் பசும்புகைப்படலம் - மேல் செல்லுகின்ற அடர்ந்த புகைத் தொகுதி; அரிய வேதியர் ஆகுதிப் புகையொடும் அளவி - சொல்லுதற்கரிய புகழ் படைத்த அந்தணர்களது ஓம குண்டத்திலிருந்து எழுகின்ற புகையோடும் கலந்து; கரிய மால்வரைக் கொழுந்து எனப் படர்வன - கரியநிறமுள்ள பெரிய மலைச்சிகரங்களைப் போல வானத்தில் படர்ந்து செல்லுகின்றவற்றை; காணாய் -.

வேடுவர் அகில் சுட்ட புகையும், வேதியர் வேள்விப் புகையும், ஒன்று கலந்து மலைச்சிகரம் போல் உள்ளது என்பதால் மறமும் அறமும் கலந்து விளங்குவதைக் குறிப்பிட்டார்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. The thick green smoke that rises as warriors with fine banded bows burn
  2. the stout dark akil logs they have felled with their axes
  3. mingles with the smoke of offerings made by the noble Vedic priests,
  4. and spreads like the dark crests of great mountains: see!

What the poem says

Two kinds of smoke rise over Cittirakūṭam: from the hunters burning fragrant akil (aloeswood) logs they have cut, and from the sacrificial fires of the Brahmin sages.

The two columns merge and tower like dark mountain peaks. The commentary sees in this the coexistence of the warrior's way and the way of piety on the same mountain.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1vari koḷ oṇ cilai vayavartam kaṇicciyiṉ maṟitta
pariya kār akil cuṭa, nimir pacum pukaip paṭalam,
ariya vētiyar ākutip pukaiyoṭum aḷavi
kariya māl varaik koḻuntu eṉap paṭarvaṉa kāṇāy.