கம்பராமாயணம் 2141 · அயோத்தியா 8.19

Section அயோத்தியா காண்டம் / 8. சித்திரகூடப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1நானம் நாள் மலர் நறை அகில் நாவி தேன் நாறும்
சோனை வார் குழல் சுமை பொறாது இடுகு இடைத் தோகாய் !
வான யாறு மீன் மலர்ந்தன எனப் புனல் வறந்த
கான யாறுகள் கணம் மணி இமைப்பன காணாய் .

பொருள் · Meaning in Tamil

நானம், நாள்மலர் நறை, அகில், நாவி, தேன், நாறும் சோனை வார் குழல் சுமை பொறாது - புழுகு, அன்றலர்ந்த மலர், மணப் பொருள், அகிற்புகை, கத்தூரி, தேன் இவற்றைப் பெற்று மணம் வீசும் திரண்ட நீண்ட கூந்தல் பாரத்தைத் தாங்க மாட்டாமல்; இறும் இடைத்தோகாய் - ஒடிகின்ற இடையினை உடைய மயில் போன்றவளே!; வான யாறு - வான வழியில்; மீன் மலர்ந்தன என - நட்சத்திரங்கள் தோன்றின என்னும்படி; புனல் வறந்த கான யாறுகள் - நீர் வற்றிப் போன காட்டாறுகளில்; கதிர் மணி இமைப்பன - ஒளியுடைய மணிகள் விட்டு விளங்குகின்றவற்றை; காணாய் -.

நானம் முதலியன கூந்தலுக்கு ஊட்டும் மண விசேடமாம். வான யாறு - தேவகங்கை என உரைத்து அதில் வண்ண மீன்கள் போல எனலும் ஆம்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Fragrant with musk, fresh flowers, perfumes, akil, civet and honey,
  2. O peahen whose waist all but breaks, unable to bear the weight of your long, dense tresses!
  3. As though stars had blossomed along the river of the sky, the forest streams whose water has run dry
  4. glitter with bright gems: see!

What the poem says

Irāmaṉ praises Cītai's thick, long hair, scented with musk, flowers, aloeswood smoke, civet and honey, so heavy that her slender waist seems ready to snap.

He points to dried-up forest streams whose beds are strewn with sparkling gems, like stars along the "river of the sky", the Milky Way. The commentary allows another reading: the heavenly Gaṅgā, with the gems like bright fish in it.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1nāṉam nāḷmalar naṟai akil nāvi tēṉ nāṟum
cōṉai vār kuḻaṟ cumai poṟātu iṟum iṭait tōkāy!
vāṉa yāṟu mīṉ malarntaṉa eṉap puṉal vaṟanta
kāṉa yāṟukaḷ katir maṇi imaippaṉa kāṇāy.