கம்பராமாயணம் 2142 · அயோத்தியா 8.20
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
விஞ்சை நாடியர் கொழுநரோடு ஊடிய - வித்தியாதர உலகத்தில் உள்ள மகளிர் தம் கணவரோடு ஊடல் கொண்டதனால்; விமலப் பஞ்சு அளாவிய சீறடிச் சுவடுகள் - (கோபத்தில் நடந்த) அவர்களது குற்றமற்ற செம்பஞ்சுக் குழம்பு தீட்டப் பெற்ற சிறிய பாதங்களின் சுவடுகள்; மஞ்சு அளாவிய மாணிக்கப் பாறையில் மறைவ - மேகங்கள் நெருங்கியுள்ள மலைமேல் உள்ள மாணிக்கப் பாறைகளில் மறைகின்றன; செஞ்செவே நெடு மரகதப் பாறையில் தெரிவ - செம்மையாக நீண்ட பச்சை நிறமுள்ள மரகதப் பாறைகளில் நன்கு தோன்றுகின்றன; காணாய் -.
செம்பஞ்சுக் குழம்பு பூசிய அடிச்சுவடுகள் நடந்து சென்று வழியில் செந்நிறமுள்ள மாணிக்கப்பாறையில் நிறவேற்றுமை இன்மையால் மறைந்து விடுகின்றன; அதே சுவடுகள் பச்சைநிற வேற்றுமையால் மரகதப் பாறையில் நன்றாகத் தெரிகின்றன என்றவாறாகும். ஊடல் கொண்ட மகளிர் கணவரை வெறுத்தாற் போன்ற குறிப்புடன் பாறைமேல் நடந்து சென்றனர். ஆதலின் செம்பஞ்சு தீட்டிய அவர்களது பாதச் சுவடுகள் பாறையில் தெரிவனவும் மறைவனவும் ஆயின. செஞ்செவே - நேராக.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Vanishing on the ruby rocks that touch the clouds,
- showing clear on the long, straight emerald rocks,
- are the tracks of the women of the land of the Vidyādharas who quarrelled with their husbands:
- see the prints of their small feet, stained with pure red lac!
What the poem says
Women of the Vidyādharas, a race of celestial beings, have walked off across the rocks in a huff after quarrelling with their husbands. Their feet are reddened with lac paste, a cosmetic.
Where they cross red ruby rock their footprints vanish, red on red; where they cross green emerald rock the prints stand out clearly. The rocks keep a broken record of the lovers' quarrel.