கம்பராமாயணம் 2143 · அயோத்தியா 8.21
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
கழித்த செம்பொனின் தொளைபுரை உந்தியின் துணையே! - கழியாகச் செய்யப்பெற்ற செம்பொன்னால் ஆகிய தொளையை ஒத்திருக்கின்ற தொப்புளை உடைய இனிய வாழ்க்கைத்துணைவியே!; கோலம் அழித்து மேவிய அரம்பையர் - (அருவியில் நீராட வந்து) தம்முடைய பழைய கோலத்தைக் களைந்து நீராடிய அரம்பை மாதர்கள்; அறல்புரை கூந்தல் கழித்து நீக்கிய - தமது கருமணலை ஒத்த கூந்தலிலிருந்து எடுத்து எறிந்த; கற்பகநறுமலர் - கற்பக மரத்தின் மணமுள்ள மலர்கள்; மாமணி கொழித்த அருவியொடு இழிவன - சிறந்த இரத்தினங்களைக் கொழித்துக்கொண்டு வருகின்ற மலை அருவியோடு இறங்கிவருவனவற்றை; காணாய் -.
கழியும் தொளையுமாகச் செம்பொன்னால் செய்தவை கொப்பூழுக்கு உவமையாம். தேவ உலகத்தில் உள்ள மாதர் கழற்றி எறிந்த மாலைகளை வானுற ஓங்கி வளர்ந்திருக்கின்ற மலை அருவிகள் அடித்துக்கொண்டு வருகின்றன என்பது கருத்து.
ஆங்கிலம் · English translationAI
Translation
- O companion, whose navel is like the opening of a tube of red gold!
- Coming down with the waterfalls that wash out great gems,
- see the fragrant karpaka flowers that the heavenly women, undoing their finery to bathe,
- pulled from their hair, dark as fine black sand, and cast away!
What the poem says
The mountain is so tall that its waterfalls begin in the heavens. The apsarases, the heavenly dancers, take off their ornaments to bathe there and throw aside the flowers of the wish-granting karpaka tree from their hair.
The falls carry those heavenly flowers down the mountain, along with the gems they wash out of the rock. Cītai's navel is compared, in the conventional way, to the round opening of a golden tube.