கம்பராமாயணம் 2145 · அயோத்தியா 8.23
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
தொடுத்த மாதவிச் சூழலில் - அடர்த்தியாக உள்ள குருக்கத்திக் கொடியால் ஆகிய பந்தரில்; சூர் அரமகளிர் படுத்து வைகிய - (தலைவரைப் பிரிந்த) தெய்வத்தன்மை உடைய அரமகளிர் உறங்கியனவும்; அன்பரை அடுத்த பல்பகல் பிரிந்தவர் என்பது நம்தமக்கு எடுத்து இயம்புவது என - தம் இனிய காதலரைத் தொடர்ந்து பற்பல நாள்கள் பிரிந்தவர்கள் என்பதனை நமக்கு எடுத்துச்சொல்லுவது போல; கரிந்து இருண்ட - (பிரிவினால் ஆகிய விரகத் தீயால்) தீய்ந்து இருள் நிறமாகிய, பல்லவச் சயனங்கள் - தளிர்ப் படுக்கைகளை; பாராய் -.
மாதவி - குருக்கத்தி (ஒருவகைக் கொடி); தலைவரைப் பிரிந்த மகளிர் உடல் வெப்பத்தை ஆற்ற மென்மையான தளிர்ப் படுக்கையில் படுத்தனர் பிரிவு நீண்ட நாள் ஆதலின் அப்படுக்கைகளும் கரிந்து தீய்ந்துள்ளன என்றதாம்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- That they had been parted from their lovers for many days on end
- they seem to tell us plainly; scorched and darkened,
- in the close-woven mātavi bower, where the awesome heavenly women
- lay down and slept: see these beds of tender leaves!
What the poem says
In a bower of mātavi (kurukkatti) creepers lie beds made of tender young leaves, now blackened and withered.
Heavenly women, separated from their lovers, lay on them to cool the fever of longing. The separation lasted so long that the heat of their bodies scorched the leaves, and the burnt beds now bear silent witness to how long they were apart.