கம்பராமாயணம் 2147 · அயோத்தியா 8.25

Section அயோத்தியா காண்டம் / 8. சித்திரகூடப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

இலவும் - முருக்க மலரும்; இந்திரகோபமும் - இந்திர கோபப் பூச்சியும்; புரை இதழ் - ஒத்திருக்கின்ற (செந்நிறமான) உதட்டை உடைய; இனியாய்! - இனியவளே!; அலவும் நுண் துளி அருவி நீர் - அலை வீசி வருகின்ற நுண்ணிய துளி சிதறும் அருவியின் நீரானது; அரம்பையர் ஆட - வானுலக மகளிர் ஆடுகின்ற காரணத்தால்; கலவை, சாந்து, செங் குங்குமம், கற்பகம், கொடுத்த பலவும் - வாசனைப் பொருள்கள், சந்தனம், சிவந்த குங்குமம், இன்னும் கற்பகமரம் கொடுத்த மணப்பொருள்கள் பலவும்; தோய்தலின் - (அருவிநீரில்) தோயப் பெறுதலால்; பரிமளம் கமழ்வன - நறுமணம்வீசப்பெறுகின்றன; பாராய் -.

அருவிநீர் தன் தன்மை இழந்து அரம்பையர் ஆடிய காரணத்தால் அவருடம்பில் பூசியிருந்த மணப்பொருள்கள் தம்மிடத்தே கலக்கப்பெற அதனால் பரிமளம் வீசுகிறது என்பதனால் தேவருலகத்தைத் தொடும் மலை உச்சி அருவிகளின் சிறப்பு உரைத்தவாறாம். இந்திர கோபம் - செந்நிறமுள்ள ஒரு வகைப் பூச்சி, மழைக்காலத்து வரும் - 'செம்மூதாய்' எனவும் பெயர் கூறுவர்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. O sweet one, whose lips are like the silk-cotton flower and the cochineal insect!
  2. The waterfall, scattering fine spray as the heavenly women bathe in it,
  3. is steeped in perfumes, sandal paste, red kuṅkumam and the many gifts of the karpaka tree,
  4. and so it breathes fragrance: see!

What the poem says

Cītai's lips are compared to the red flower of the silk-cotton tree and the scarlet "Indra's cowherd" insect that appears in the rains.

Irāmaṉ notes that the mountain waterfalls smell sweet. The heavenly women bathe in them at the top, where the mountain touches heaven, and the perfumes, sandal paste, saffron and other gifts of the karpaka tree on their bodies wash into the water and scent it all the way down.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1ilavum intirakōpamum purai itaḻ iṉiyāy!
alavum nuṇ tuḷi aruvi nīr, arampaiyar āṭa
kalavai, cāntu, ceṅ kuṅkumam kaṟpakam koṭutta
palavum tōytaliṉ, parimaḷam kamaḻvaṉa pārāy!