கம்பராமாயணம் 2148 · அயோத்தியா 8.26

Section அயோத்தியா காண்டம் / 8. சித்திரகூடப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

செம் பொனால் செய்து - சிவந்த பொன்னால் செய்து; குலிகம் இட்டு எழுதிய - சாதிலிங்கக் குழம்பினால் தொய்யிலாகப் படம் வரைந்து எழுதிய; செப்பு - சிமிழை; ஓர் கொம்பு தாங்கியது - ஒரு கொம்பு தாங்குகின்றது; எனப் பொலி - என்று சொல்லுமாறு விளங்குகின்ற, வனமுலைக் கொடியே - அழகிய முலைகளை உடைய கொடி போல்பவளே!; அலர்கதிர் - ஒளி விளங்குகின்ற சூரியன்; அம் பொன்மால்வரை உச்சி சென்று அணுக - அழகிய பொன் மயமான பெரிய மலையின் உச்சியில் சென்று சேர; பைம்பொன் மாமுடி மிலைச்சியது ஒப்பது - அம்மலைக்குப் பசிய பொன்னால் பெரிய மகுடம் சூட்டியது போல் உள்ளதனை பாராய் -.

சூரியன் உச்சிப் போதில் மலை உச்சியை வந்து அடைகிறபோது மலைக்குப் பொன் மகுடம் சூட்டியதுபோல் தோற்றம் அளிக்கிறது. செப்பின் மேல் வண்ணக்கோலம் எழுதுதல் உண்டாதலின் அது தொய்யில் எழுதிய முலைக்கு ஒப்பாயிற்று. வனம் - அழகு.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. O creeper whose lovely breasts shine as though a single slender branch bore
  2. caskets wrought of red gold and painted with vermilion!
  3. As the blazing sun climbs to the summit of the lovely golden mountain,
  4. it is as if the mountain had put on a great crown of bright gold: see!

What the poem says

At noon the sun stands directly over the mountain's peak, and the mountain seems to wear a golden crown.

The address to Cītai uses a standard image of Tamil love poetry: breasts like small golden caskets, painted with designs, borne on a slender branch. Women decorated their breasts with painted patterns (toyyil), just as caskets were decorated.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1cem poṉāl ceytu, kulikam iṭṭu eḻutiya ceppu ōr
kompu tāṅkiyatu eṉap poli vaṉa mulaik koṭiyē!
am poṉ māl varai alar katir ucci ceṉṟu aṇukap
paim poṉ mā muṭi milaicciyatu oppatu pārāy.