கம்பராமாயணம் 2149 · அயோத்தியா 8.27

Section அயோத்தியா காண்டம் / 8. சித்திரகூடப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

மடந்தைமார்களில் திலதமே! - பெண்களில் திலகம் போலச் சிறந்தவளே!; மணி நிறத் திணி கல் தொடர்ந்த பாறையில் - செம்மணியால் ஆகிய (சிவந்த) நிறத்தை உடைய திணிந்த கல் பரவியிருக்கின்ற மலைப் பாறையில்; வேய் இனம் சொரிகதிர் முத்தம் - மூங்கில் கூட்டம் சொரிந்த ஒளிபடைத்த முத்துகள்; இடம் தொறும் கிடந்து இமைப்பன - அங்கங்கே (பாறைகளின் இடை இடையே) கிடந்து ஒளி வீசி விளங்குகின்றன; எக்கு இளஞ்செக்கர் வானிடை - மேலேறிப் படர்ந்த இளைய செவ்வானத்திடத்து; தாரகை நிகர்ப்பன - நட்சத்திரங்களை ஒத்து விளங்குகின்றன; பாராய்.

செம்மணிக் கற்பாறையில் இடையிடை பரவிச் சிதறிக் கிடக்கும் மூங்கில் முத்துக்கள் செவ்வானத்து விண்மீன்களைப் போல் உள்ளன. எக்குதல் - மேல் ஏறுதல் - இனி மிகுதல் என்னும் பொருள் உடைய தெலுங்குச் சொல் என்பது ஒன்று.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. O tilakam among women! On the rocks spread with dense stone the colour of rubies,
  2. the bright pearls shed by clumps of bamboo
  3. lie glittering here and there, like stars
  4. in a sky across which the young red glow of evening has spread: see!

What the poem says

Irāmaṉ calls Cītai the tilakam, the ornamental forehead mark, of all women: the finest among them.

Pearls were believed to form in bamboo, and here they have fallen from the bamboo onto red ruby rocks. White pearls scattered over red stone look like the first stars showing in a sky still red with sunset.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1maṭantaimārkaḷil tilatamē! maṇi niṟat tiṇi kal
toṭarnta pāṟaiyil vēyiṉam cori katir muttam
iṭamtoṟum kiṭantu imaippaṉa, ekku iḷañ cekkar
paṭarnta vāṉiṭai tārakai nikarppaṉa pārāy.