கம்பராமாயணம் 2150 · அயோத்தியா 8.28

Section அயோத்தியா காண்டம் / 8. சித்திரகூடப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1குழுவும் நுண் தொளை வேயினும் , குறி நரம்பு எறிவுற்று
எழுவு தண் தமிழ் யாழினும் , இனிய சொல் கிளியே !
முழுவதும் மலர் விரிந்த நாண் முருக்கு இடை மிடைந்த
பழுவம் , வெம் கனல் கதுவியது ஒப்பது பாராய் .

பொருள் · Meaning in Tamil

நுண் தொளை குழுவும் வேயினும் - நுண்ணிய தொளை நிரம்பப் பெற்ற புல்லாங்குழல் ஓசையினும்; குறி நரம்பு எறிவு உற்று எழுவு தண்தமிழ் யாழினும் - ஓசையைக் குறித்து (எழுப்பவல்ல) நரம்புகளை (கை விரல்களால் தடவி) எழுப்பப்படுகின்ற குளிர்ந்த இனிய யாழ் ஓசையினும்; இனிய - இனிமையான; சொல் கிளியே - சொற்களைப் பேசுகின்ற கிளிபோல்பவளே!; முழுவதும் மலர் விரிந்த தாள் முருக்கு - முற்றிலும் பூக்கள் பூத்துள்ள அடிமரத்தை உடைய முருக்க மரம்; இடை மிடைந்த பழுவம் - இடையே நெருங்கி உள்ள காடு; வெங் கனல் கதுவியது ஒப்பன - கொடிய நெருப்பினால் பற்றப்பட்டுள்ளது போன்றவற்றை; பாராய்.

முருக்கமலர் செந்நிறம் உடையது ஆதலின், முழுதும் மலர் பூத்த முருக்க மரம் நிரம்பியுள்ள காடு தீப்பிடித்தது போலத் தோன்றுவது இயற்கையாகும்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. O parrot whose speech is sweeter than the flute with its row of fine holes
  2. and the cool Tamil lute that sounds when its tuned strings are plucked!
  3. The forest, crowded with murukku trees whose trunks are covered with open blossoms,
  4. looks as though fierce fire had caught it: see!

What the poem says

Cītai's voice is sweeter than flute or Tamil lute (yāḻ), and Irāmaṉ calls her a parrot for her speech.

He shows her a stretch of forest full of murukku trees (the flame of the forest) in full bloom. Their flowers are so red and so many that the whole wood looks as if it were on fire.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1kuḻuvu nuṇ toḷai vēyiṉum, kuṟi narampu eṟivuṟṟu
eḻuvu taṇ tamiḻ yāḻiṉum, iṉiya col kiḷiyē!
muḻuvatum malar virinta tāḷ murukku iṭai miṭainta
paḻuvam, veṅ kaṉal katuviyatu oppaṉa pārāy.