கம்பராமாயணம் 2153 · அயோத்தியா 8.32
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
அலம்பு வார் குழல் ஆய் மயில் பெண் அருங்கலமே! - அசைகின்ற நீண்ட கூந்தலை உடைய அழகிய மயில் போன்ற பெண்களுக்கு அணிகலமாய் விளங்குகின்றவளே!; நலம் பெய் வேதியர் - நன்மையைச் செய்கின்ற அந்தணர்கள்; மார்பினுக்கு - மார்பில் அணிவதற்கு; இயைவு உற - பொருந்த; நாடி - ஆராய்ந்து; தேமாம் பலம் பெய் மந்திகள் - தேமா மரத்திலிருந்து பழங்களைக் கீழே சிதறுகின்ற இயல்பை உடைய குரங்குகள்; சிலம்பி பஞ்சினில் - பட்டுப் பூச்சி, பஞ்சு இவற்றால் ஆகிய; சிக்கு அறத் தெரிந்த நூல் - சிக்கில்லாதபடி ஆராய்ந்து கொண்டுவந்த நூலை; உடன் வந்து - விரைந்து வந்து; கொடுப்பன - கொடுக்கின்றவற்றை; பாராய் -.
அந்தணர் முப்புரிநூல் அணிதற்கு மந்திகள் பட்டுப்பூச்சி பஞ்சு ஆகியவற்றில் இருந்து சிக்கில்லாத நூலைத் தேர்ந்து கொடுத்து உதவி செய்கின்றன என்பதும் மேலது போன்றதே.
ஆங்கிலம் · English translationAI
Translation
- O rare jewel among women lovely as peahens, with long swaying tresses!
- Looking for what will suit the chests of the good Vedic priests,
- thread sorted free of tangles from the silkworm and from cotton, the monkeys
- that drop sweet mangoes come at once and give it: see!
What the poem says
The monkeys too serve the sages. Knowing that the Brahmins need thread for their sacred threads, worn across the chest, they gather fibre from silk cocoons and cotton, sort out clean, untangled strands, and bring them to the priests.
These monkeys are the same ones that shake down sweet mangoes from the trees.