கம்பராமாயணம் 2154 · அயோத்தியா 8.33

Section அயோத்தியா காண்டம் / 8. சித்திரகூடப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1தெரிவைமார்க்கு ஒரு கட்டளை எனச் செய்த திருவே !
பெரிய மாக் கனி , பலாக் கனி , பிறங்கிய வாழை
அரிய மாக் கனி , கடுவன்கள் அன்பு கொண்டு அளிப்பக்
கரிய மா , கிழங்கு அகழ்ந்தன கொணர்வன காணாய் !

பொருள் · Meaning in Tamil

தெரிவைமார்க்கு - மகளிர்க்கு; ஒரு கட்டளை எனச் செய்த திருவே - ஓர் உரைகல் போலச் செய்த திருவே!; கடுவன்கள் - ஆண் குரங்குகள்; அன்பு கொண்டு - (முனிவர்பால்) அன்பு கொண்டு; பெரிய மாக் கனி - பெரிய மாம் பழம்; பலாக்கனி - பலாப் பழம், பிறங்கிய வாழை அரிய மாக் கனி - விளங்கிய வாழையினது அரிய பெரும் பழம் ஆகியவற்றை; அளிப்ப - கொடுக்க; கரி மா - கரியவிலங்காகிய பன்றிகள்; அகழ்ந்தன - (தாம்) தோண்டி எடுத்தனவாகிய, கிழங்கு - கிழங்குகளை; கொணர்வன - கொண்டுவந்து தருவனவற்றை; காணாய் -.

ஆண் குரங்குகள் மா, பலா, வாழை என்னும் பழங்களைத் தருகின்றன. பன்றிகள் கிழங்குகளைத் தருகின்றன என்பதாம். மகளிரைப் படைத்தற்கு முன்மாதிரியாகச் செய்தமைத்துக் கொள்ளும் வடிவம் கட்டளை எனப்படும். அத்தகைய அழகு வடிவமே பிராட்டி என்றானாம். 'கமலத்துக் கடவுள் தானே, ....உருவினுக்கு உலகம் மூன்றின் இருதிறத்தார்க்கும் செய்த வரம்பு இவர் இருவர்' (2792) என்கிற சூர்ப்பணகை இங்கு ஒத்துக் கருதுக.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. O Tiru, fashioned as the model for all women!
  2. Great mangoes, jackfruit, and the rare big fruit of the shining plantain
  3. the male monkeys bring out of love, while
  4. the dark beasts bring the roots they have dug up: see!

What the poem says

Irāmaṉ calls Cītai the model, the master pattern, from which the Creator shapes all other women. The commentary compares a later verse where Cūrppaṇakai says that Irāmaṉ and Cītai are the standard of beauty for all three worlds.

He shows her more animals feeding the hermits: monkeys bring mangoes, jackfruit and plantains, the three classic fruits of Tamil tradition, and the dark wild boar bring roots they have dug up.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1terivaimārkku oru kaṭṭaḷai eṉac ceyta tiruvē!
periya māk kaṉi, palāk kaṉi, piṟaṅkiya vāḻai
ariya māk kaṉi, kaṭuvaṉkaḷ aṉpu koṇṭu aḷippaṉa
kariya mā, kiḻaṅku akaḻntaṉa koṇarvaṉa kāṇāy!