கம்பராமாயணம் 2155 · அயோத்தியா 8.34

Section அயோத்தியா காண்டம் / 8. சித்திரகூடப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1ஐவனக் குரல் , ஏனலின் கதிர் , இறுங்கு , அவரை ,
மெய் வணக்கு உறு வேய் இனம் ஈன்ற மெல் அரிசி ,
பொய் வணக்கிய மா தவர் புரை தொறும் புகுந்து , உன்
கை வணத்த வாய்க் கிள்ளை தந்து அளிப்பன காணாய் .

பொருள் · Meaning in Tamil

உன் கை வணத்த வாய்க் கிள்ளை - (சீதையே!) உன் கை போன்ற செந்நிறவாயினையுடைய கிளிகள்; ஐவனக் குரல் - மலை நெல் கதிர்; ஏனலின் கதிர் - தினைக் கதிர்; இறுங்கு - சோளக் கதிர்; அவரை - அவரைகள்; மெய்வணக்குறு வேய் இனம் ஈன்ற மெல் அரிசி - உடலால் வளைவு பொருந்திய மூங்கிலிற் பிறந்த மென்மையான அரிசி ஆகியவற்றை; பொய் வணங்கிய மாதவர் - பொய்யை ஓட்டிய முனிவர்களது; புரைதொறும் - ஆசிரமக் குடில்கள் தோறும்; புகுந்து - நுழைந்து; தந்து அளிப்பன - கொடுத்து அன்பு செய்வனவற்றை; காணாய் -.

வணங்கி - வணங்கச் செய்த - இங்குத் தோல்வியைக் குறித்தது; பொய்யைத் தோற்கடித்த முனிவர்கள். கிளிகள் முனிவர்களுக்கு உணவு கொண்டுவந்து அன்புடன் கொடுத்து உதவுகின்றன என்றாராம்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Ears of hill rice, heads of millet, sorghum, beans,
  2. and the soft rice borne by clumps of bamboo bending low:
  3. going into every hut of the great ascetics who have humbled falsehood,
  4. the parrots whose beaks are red as your hands bring them and give: see!

What the poem says

The parrots, whose red beaks are the colour of Cītai's palms, also play their part. They fly into the sages' huts carrying grain: hill rice, millet, sorghum, beans, and the rare rice that bamboo yields when it flowers.

The sages are those who have "made falsehood bow", that is, defeated it entirely.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1aivaṉak kural, ēṉaliṉ katir, iṟuṅku, avarai,
mey vaṇakkuṟu vēy iṉam īṉṟa mel arici,
poy vaṇaṅkiya mā tavar puraitoṟum pukuntu, uṉ
kai vaṇatta vāyk kiḷḷai tantu aḷippaṉa kāṇāy.