கம்பராமாயணம் 2156 · அயோத்தியா 8.35
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
இடி கொள் வேழத்தை - இடி போலப் பிளிறுதல் கொண்ட யானையை; எயிற்றொடும் எடுத்து உடன் விழுங்கும் கடிய மாசுணம் - தந்தத்தோடு ஒருசேரத் தூக்கிவிழுங்கி விடக்கூடிய கொடிய மலைப் பாம்பு; கற்று அறிந்தவர் - நூற்பொருளைக் கற்றுத் தெளிந்தவர்; என - போல; அடங்கி - அடக்கம் உடையதாய் (தம் ஆற்றலை ஒடுக்கிக் கொண்டு); சடை கொள் சென்னியர் - சடா முடியை உடைய முனிவர்கள்; தாழ்வு இலர் - சரிதல் இல்லாதவராய், தாம் மிதித்து ஏற - தாமே மலையின் மேல் மிதித்து ஏறிச் செல்லும்படி; படிகளாம் என - படிக்கற்களைப் போல; தாழ்வரை - மலை அடிவாரங்களில்; கிடப்பன - கிடக்கின்றவற்றைப்; பாராய் -.
ஆற்றல் சான்ற மலைப்பாம்புகள் அடங்கி இருத்தலுக்குக் கற்றுணர்ந்தவர் அடக்கம் உவமையாகும். “தேர்ந்த நூல் கல்விசேர் மாந்தரின் இறைஞ்சி' என்ற சிந்தாமணியை இங்குக் (நாமகள் - 53) கருதுக. மலைப் பாம்புகளும் படிகளாகக் கிடந்து முனிவர்கள் தாழாது மலையேற உதவுகின்றன என்றவாறாம்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- The fierce pythons, which can seize a thundering elephant, tusks and all, and swallow it whole,
- lie humbled like men of true learning,
- so that the ascetics with matted locks may tread on them and climb without stumbling;
- in the valleys they lie like flights of steps: see!
What the poem says
Even the huge pythons, strong enough to swallow an elephant whole, become gentle here. They lie still in the valleys like a staircase, so that the elderly sages can step on them and climb the mountain without slipping.
Their quiet restraint is compared to the humility of the truly learned, who keep their power in check. The commentary cites a similar image from the Cīvakacintāmaṇi.