கம்பராமாயணம் 2157 · அயோத்தியா 8.36
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
அசும்பு பாய் வரை - ஊற்றெடுத்து நீர்பாயும் மலையிலே; அரும் தவம் முடித்தவர் - செய்தற்கு அரிய தவத்தைச் செய்து முடித்தவர்கள் ஆகிய; துணைக்கண் தசும்பு வேய்ந்தவர் ஒத்தவர் தமக்கு - தம் இரண்டு கண்களிலும் நீர்க்குடம் கவிழ்த்தாற்போல அன்பினால் நீர் பெருக விடுகின்றவர்களை ஒத்தவர்களாய நல்லோர்களுக்கு, விண் தருவான் - வீடு பேறாகிய விண்ணுலக வாழ்வினைத் தர வேண்டி; விசும்பு தூர்ப்பன ஆம் என - ஆகாயத்தை மூடிக் கொள்வனவாகும் என்று சொல்லும்படி; வெயில் உக விளங்கும் - ஒளி சிந்தும்படி விளங்குகின்ற; பசும்பொன் மானங்கள் - பசிய பொன்னால் ஆகிய விமானங்கள்; போவன வருவன - போகின்றவற்றையும், மீள வருகின்றவற்றையும்; பாராய் -.
சித்திரகூட மலை தேவர்கள் சஞ்சரிக்கும் இடம், ஆதலின், அவர்கள் விமானத்தில் ஏறிப்போவதும் வருவதுமாயிருத்தலின் வானமெங்கும் விமானத்தால் போர்த்தப்பட்டது போல் உள்ளது. அதுவே அருந்தவம் முடித்தவர்களுக்கு வீடுபேறு தருதற்கு விண்ணுலகு கொண்டு செல்ல வந்த விமானங்கள் போலவும் தோற்றம் அளித்தன. தசும்பு - குடம்; புறம் பொசிகின்ற மண்குடத்தைக் குறிக்கும்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- For those who have completed hard penance on this mountain of gushing springs, who are like men
- whose two eyes stream as if from tilted water-pots, to bear them to heaven,
- so many that they seem to choke the sky, scattering light,
- the shining chariots of bright gold come and go: behold!
What the poem says
The last sight Irāmaṉ shows Cītai. Cittirakūṭam is a haunt of the gods, and their golden aerial chariots (vimāṉas) fly to and fro so thickly that they seem to cover the sky.
They also look as if they had come to carry to heaven the sages who have completed their penance, men whose eyes overflow with tears of devotion as if water-pots had been tipped over.