கம்பராமாயணம் 2159 · அயோத்தியா 8.38

Section அயோத்தியா காண்டம் / 8. சித்திரகூடப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1மா இயல் உதயம் ஆம் துளப வானவன் ,
மேவிய பகை இருள் அவுணர் வீந்து உகக்
கா இயல் குடவரைக் காலம் நேமி மேல்
ஏவிய திகிரி போல் , இரவி ஏகினான் .

பொருள் · Meaning in Tamil

மா இயல் உதயம் ஆம் துளப வானவன் - பெருமை பொருந்திய இயல்பினை உடைய உதயகிரி ஆகிய துளசி மாலை அணிந்த திருமால்; மேவிய பகை இருள் அவுணர் வீந்து உக - (தேவர்க்குப் பகையாகப்) பொருந்திய பகைமை கொண்ட இருள் நிறம் உடைய அசுரர்கள் கெட்டு அழிய; கா இயல் குடவரை கால நேமி மேல் - சோலை சூழ்ந்த அத்தமனகிரி ஆகிய (அசுரருள் மிகக் கொடியன் ஆகிய) கால நேமி என்பவன் மீது; ஏவிய திகிரி போல் - செலுத்திய சக்கரப் படையைப் போல; இரவி ஏகினான் - சூரியன் சேர்ந்தான்.

உதய மலையாகிய திருமால் அங்கிருந்து அத்தமன மலை ஆகிய கால நேமிமேல் அனுப்பிய சக்கரம் போல மேற்குத் திசையில் சூரியன் சேர்ந்தான். குட வரையைக் கால நேமியாகவும் அங்கே சென்று சேர்ந்த சூரியனைச் சக்கரப் படையாகவும் கொண்டமையால் எதிர்த் திசையாக உதய மலையைச் சக்கரம் அனுப்பிய திருமாலாகச் சொன்னார்.

நரசிங்க அவதாரம் செய்து திருமாலாற் கொல்லப்பட்ட இரணியன் புத்திரன் காலநேமி. நூறு தலைகளையும் நூறு கைகளையும் உடையவன். அசுரர்களைச் சார்ந்து தேவர்கள் அனைவரையும் வெற்றி கொண்டு சத்தியலோகம் சென்றான். தன்னை அனைவரும் வணங்கித்துதிக்க வீற்றிருந்தான். மேலும் செருக்குற்றுத் தன் தந்தையைக் கொன்ற திருமாலைப் போருக்கழைத்தான். திருமாலின் சக்கரத்தால் அழிந்தான்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Like the discus that the tulasi-wearing god, who is the great mountain of sunrise, hurled
  2. so that the hostile demons of darkness perished and fell,
  3. upon Kālanēmi, who is the grove-girt western mountain,
  4. so the sun went on its way.

What the poem says

Sunset, described as a myth of Viṣṇu. The eastern mountain where the sun rises is Viṣṇu, wearing his tulasi garland. The western mountain where it sets is the demon Kālanēmi, and the sun travelling from one to the other is Viṣṇu's discus hurled at the demon. The darkness that the sun destroys stands for the dark-skinned demon hosts.

Kālanēmi, a hundred-headed, hundred-armed son of Hiraṇyakaśipu, conquered the gods, grew arrogant, challenged Viṣṇu, the slayer of his father, and was cut down by the discus.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1mā iyal utayam ām tuḷapa vāṉavaṉ,
mēviya pakai iruḷ avuṇar vīntu uka
kā iyal kuṭa varaik kāla nēmimēl
ēviya tikiripōl, iravi ēkiṉāṉ.