கம்பராமாயணம் 2160 · அயோத்தியா 8.39
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
சக்கரம் தானவன் உடலில் தாக்குற - (திருமாலின்) சக்கரப் படை கால நேமியாகிய அசுரன் உடலில் சென்று தாக்கிய அளவில்; எக்கிய சோரியின் - மேல் எழுந்த அவனது இரத்தம் போல; எங்கணும் செக்கர் பரந்தது - எல்லா இடங்களிலும் செவ்வானம் பரவியது; அத் தீயவன் வாயின் தீர்ந்து - அக் கொடிய காலநேமியின் வாயிலிருந்து கழன்று; வேறு உக்க வான் தனி எயிறு - தனியாகச் சிந்திய வெண்மையான ஒற்றைக்கோரைப் பல்லை; இந்து ஒத்தது - சந்திரன் ஒத்திருந்தது.
செவ்வானம் இரத்தமாகவும், சந்திரன் அசுரனது சிந்திய கோரைப் பல்லாகவும் உவமிக்கப்பெற்றன.
ஆங்கிலம் · English translationAI
Translation
- As the discus struck the demon's body,
- like his spurting blood the red glow of evening spread
- everywhere; and like a single bright tusk that had broken from that evil one's mouth
- and fallen away, was the moon.
What the poem says
The image continues. When the sun-discus strikes the western mountain-demon, the red glow of sunset spreading over the sky is his blood gushing out.
The pale moon rising in the sky is one of his white fangs, knocked out of his mouth and flung away.