கம்பராமாயணம் 2161 · அயோத்தியா 8.40
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
புலரி போனபின் - சூரியன் மறைந்த பிறகு; மகளிருக்கு ஆனனம் அளித்த தாமரைப் பூ - இதுகாறும் பெண்களுக்கு முகத்தைச் செய்தனவாகிய மலர்ந்த தாமரைப் பூக்கள் (இப்போது) நனி முகிழ்த்தன - மிகவும் குவிந்தன; வான் எனும் மணித்தடம் - வானம் போல உள்ள அழகிய நீர்நிலையில்; மீன் என விளங்கிய - நட்சத்திரம் போல விளங்கிய; வெள்ளி ஆம்பல் வீ - வெண்ணிறம் உள்ள ஆம்பல் மலர்கள்; எங்கும் மலர்ந்த - எவ்விடத்தும் மலர்ந்தன.
மலர்ந்த தாமரை பெண்கள் முகம் போலும் ஆதலின், மலர்ந்த தாமரை என்று சொல்வார் மகளிருக்கு ஆனனம் அளித்த தாமரை” என்றார். இரவில் தாமரை குவிதலும் ஆம்பல் மலர்தலும் இயல்பு.
ஆங்கிலம் · English translationAI
Translation
- When the light of day had gone, the lotus flowers that had lent
- their faces to women closed up tight,
- and white water-lilies, shining like stars,
- bloomed everywhere in the jewelled pools that were like the sky.
What the poem says
Night falls. Lotuses, which bloom by day and are the usual comparison for a woman's face, fold their petals; hence the poet says they "lent their faces" to women.
White water-lilies, which open at night, bloom across the ponds, so that each pond looks like the night sky full of stars.