கம்பராமாயணம் 2162 · அயோத்தியா 8.41

Section அயோத்தியா காண்டம் / 8. சித்திரகூடப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

மந்தியும் கடுவனும் மரங்கள் நோக்கின - (இரவு நேரம் வருதலின் ஏறி உறங்க) பெண் குரங்கும் ஆண் குரங்கும் மரங்களைப் பார்த்தன; தந்தியும் பிடிகளும் தடங்கள் நோக்கின - ஆண் யானையும் பெண் யானையும் தம் இருப்பிடத்துக்குச் சென்று சேரும் வழிகளைப் பார்த்தன; நிந்தை இல் சகுந்தங்கள் நீளம் நோக்கின - பழிப்பு இல்லாத பறவைகள் தம் கூடுகள் உள்ள நீண்ட வழியைப் பார்த்தன; அறிவை நோக்கினான் - மெய்ப்பொருளை நோக்கி அறிதற்கு உரிய இராமன்; அந்தியை நோக்கினான் - மாலைக்காலத்தில் செய்தற்கு உரிய கடமைகளைச் செய்யத் தொடங்கினன்.

குரங்குகள் இரவில் மரத்தின்கண் உறங்கல் இயல்பு; பறவைகள் தம் கூட்டை அடைதலும், யானை முதலியன தம் இருப்பிடத்தை நாடிச் சேறலும் மாலை நேரத்தில் நிகழ்வன. தடம் - வழி.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. The female and male monkeys looked to the trees;
  2. the tuskers and their mates looked to the paths;
  3. the blameless birds looked to the long way home;
  4. and he whose gaze is on true knowledge looked to the evening rites.

What the poem says

A verse built on one repeated verb. At dusk every creature turns to its own concern: monkeys to the trees where they will sleep, elephants to the paths home, birds to the long flight back to their nests.

Irāmaṉ, who is always intent on true knowledge, turns to the evening, meaning the evening prayers and rites that are his duty.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1mantiyum kaṭuvaṉum maraṅkaḷ nōkkiṉa;
tantiyum piṭikaḷum taṭaṅkaḷ nōkkiṉa;
nintai il cakuntaṅkaḷ nīḷam nōkkiṉa;
antiyai nōkkiṉāṉ aṟivai nōkkiṉāṉ.