கம்பராமாயணம் 2163 · அயோத்தியா 8.42
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
மொய் உறு நறு மலர் சில முகிழ்த்தவாம் - (மாலையில்) நெருங்கிப் பொருந்திய மணமுள்ள மலர்கள் சில குவிந்தன; மை அறு நறு மலர் சில மலர்ந்தவாம் - குற்றமற்ற மணமுள்ள மலர்கள் சில மலர்ந்தன; ஐயனோடு - இராமனோடு; இளவற்கும் - இலக்குவனுக்கும்; அமுதனாளுக்கும் - அமுதத்தை ஒத்த சீதைக்கும்; கைகளும் கண்களும் கமலம்போன்ற - கைகளும், கண்களும் மாலைக் காலத்துத் தாமரைகள் குவிந்திருப்பது போல் குவிந்து மூடிக்கொண்டன.
மாலையிற் சில மலர் குவிதலும், வேறுசில மலர்தலும் இயல்பு - வழிபாடு செய்வார் கண்களை மூடிக் கைகளைக் குவிப்பர் ஆதலின், இங்கு மாலைக்காலத்துத் தாமரை குவிந்திருப்பது போலக் கைகளும், கண்களும் ஆயின என்று குறிப்பால் அதனைப் புலப்படுத்தினர். ஏகாரம் ஈற்றசை.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Some fragrant flowers, thronged by bees, closed up;
- some flawless fragrant flowers opened;
- and for the lord, for his younger brother, and for her who is like nectar,
- hands and eyes became like lotuses.
What the poem says
The three perform their evening worship, and the poet says so indirectly. At dusk some flowers close and others open.
The hands and eyes of Irāmaṉ, Ilakkuvaṉ and Cītai become "like lotuses", that is, like lotuses at evening, closed: their hands are joined in prayer and their eyes shut in meditation.