கம்பராமாயணம் 2165 · அயோத்தியா 8.44

Section அயோத்தியா காண்டம் / 8. சித்திரகூடப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1நெடுங் கழை குறுந்தறி நிறுவி , மேல் நிரைத்து ,
ஒடுங்கல் இல் நெடும் முகடு ஒழுக்கி , ஊழ் உற
இடுங்கல் இல் கை விசித்து ஏற்றி , எங்கணும்
முடங்கல் இல் வரிச்சு மேல் விரிச்சு மூட்டி ஏ .

பொருள் · Meaning in Tamil

நெடுங் கழைக் குறுந்துணி நிறுவி மேல் நிரைத்து - நீண்ட மூங்கில்களின் சிறிய துண்டுகளை நிறுத்தி மேலே வரிசையாக அமைத்து; ஒடுங்கல் இல் நெடு முகடு ஒழுக்கி - வளைதல் இல்லாத நீண்ட தூலத்தை நேராக நிறுத்தி; ஊழ் உற இடுங்கல் இல் கை ஏற்றி விசித்து - முறையாகப் பொருந்தக் கீழே தாழ்தல் இல்லாத பக்கக் கழிகளை மேல் ஏற்றி நன்கு இறுக்கிக் கட்டி; முடங்கல் இல் வரிச்சு மேல் - வளைதல் இல்லாத அந்தக் கட்டிய வரிச்சுக்களின் மேலே; எங்கணும் - எவ்விடத்தும்; விரிச்சு மூட்டி - விரித்து மூடு செய்து.

நீளக்கழி, குறுக்குக் கழிகள் தூலம் முதலியன கூரை வேய்வதற்கு முன் கட்டப் பெறுவன. விரிச்சு - விரித்து. ஏகாரம் ஈற்றசை.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Setting up short lengths cut from long bamboo and ranging them above,
  2. laying a long, unbending ridge-pole straight along the top, and in due order
  3. lifting the side-poles that do not sag and binding them tight, and everywhere
  4. spreading the straight laths over them and covering it all—

What the poem says

Here begins a run of verses describing how Ilakkuvaṉ built the hut, step by step, like a carpenter's account.

First the frame: short bamboo posts set upright, a straight ridge-pole along the top, side-poles lashed firmly in place, and a lattice of straight laths spread over them, ready for thatching. The sentence runs on into the following verses.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1neṭuṅ kaḻaik kuṟun tuṇi niṟuvi, mēl niraittu,
oṭuṅkal ilneṭu mukaṭu oḻukki, ūḻuṟa
iṭuṅkal il kai vicittu ēṟṟi, eṅkaṇum
muṭaṅkal il variccu mēl viriccu mūṭṭiyē.