கம்பராமாயணம் 2166 · அயோத்தியா 8.45

Section அயோத்தியா காண்டம் / 8. சித்திரகூடப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1தேக்கு அடைப் படலையின் செறிவு செய்து , பின் ,
பூக் கிளர் நாணலின் புல்லு வேய்ந்து , கீழ்த்
தூக்கிய வேய்களில் சுவரும் சுற்றுறப்
போக்கி , மண் எறிந்து , அவை புனலில் தீற்றி ஏ .

பொருள் · Meaning in Tamil

தேக்கு அடைப் படலையின் செறிவு செய்து - தேக்க இலை கொண்டு மேல் கூரையைச் செறிய மூடி, பின் - பிறகு; பூக் கிளர் நாணலின் புல் வேய்ந்து - பூத்து விளங்கும் நாணற் புல்லை மேலே பரப்பி; கீழ்த் தூக்கிய வேய்களின் - கீழே நிறுத்தப் பெற்ற மூங்கில் கழிகளால்; சுற்றுறச் சுவரும் போக்கி - சுற்றுப்பக்கமெல்லாம் சுவரைச் செய்து; மண் எறிந்து - அதன்மேல் மண்ணை அடித்து; அவை - அச்சுவரை; புனலின் தீற்றி - தண்ணீரால் மெழுகிப் பூசி.

முதலில் இலைகளை வேய்ந்து அதன் மேல் நாணற் புல்லைப் பரப்பினான் என்க. இலைகள் நாணற்புல் விழாமல் தாங்குவன. மூங்கிற் பிளாச்சுகளின் மேல் மண்பூசித் தண்ணீரால் மெழுகிச் சுற்றுச் சுவர் அமைத்தானாம். ஏகாரம் ஈற்றசை.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Closing the roof in tight with a thatch of teak leaves, and then
  2. covering it with grass of flowering reeds, and below,
  3. running walls all round of upright bamboo,
  4. throwing mud onto them and smoothing them over with water—

What the poem says

The building continues. Ilakkuvaṉ first lays broad teak leaves over the frame, so that the reed thatch spread over them cannot fall through.

He then makes the walls of split bamboo set upright all round, daubs them with mud, and smooths them with water.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1tēkku aṭaip paṭalaiyiṉ ceṟivu ceytu, piṉ,
pūk kiḷar nāṇaliṉ pullu vēyntu, kīḻt
tūkkiya vēykaḷiṉ cuvarum cuṟṟuṟap
pōkki, maṇ eṟintu, avai puṉaliṉ tīṟṟiyē.