கம்பராமாயணம் 2167 · அயோத்தியா 8.46
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
மிதிலை நாடிக்கும் - சீதைக்கும்; வேறும் இடம் இயற்றினன் - தனி இடத்தைச் செய்து அமைத்தான் (எவ்வாறு எனில்), கூறின நெறி முறை குயிற்றி - மேலே சொன்ன முறைப்படி செய்து அதன்மேல்; குங்குமச் சேறு கொண்டு அழகுறத் திருத்தி - குங்குமக் குழம்பைக் கொண்டு அழகாகச் சுவர்களை ஒழுங்கு செய்து; திண்சுவர் - வலிய சுவரிலே; ஆறு இடு மணியொடு தரளம் அப்பி - ஆற்றிலிருந்து கிடைத்த மணிக்கற்களோடு முத்துகளையும் பொருத்தி.
பிராட்டியின் தனி இடத்தைக் குங்குமக் குழம்பால் பூசி, மணியும் முத்தும் சுவர்களிலே அப்பி அழகு செய்தமை கூறினார். ஏகாரம் ஈற்றசை.
ஆங்கிலம் · English translationAI
Translation
- For the lady of Mithilai he made a separate room,
- building it in the way already told; with kuṅkumam paste
- he finished it beautifully, and on its strong walls
- set gems washed down by the river, and pearls—
What the poem says
For Cītai, "the lady of Mithilai", Ilakkuvaṉ builds a separate chamber in the same way.
He takes more care over it: he plasters its walls with red saffron paste and sets into them gems and pearls gathered from the riverbed.