கம்பராமாயணம் 2169 · அயோத்தியா 8.48
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
இன்னணம் - இவ்வாறு; இளையவன் இழைத்த சாலையில் - இலக்குவன் செய்து அமைத்த சாலையில்; நல் நெடும் திசை முகன் அகத்தும் - நல்ல பெரிய பிரமதேவனது நெஞ்சத்திடத்தும்; நம்மனோர்க்கு - நம்மை ஒத்தவர்களுக்கு; உன்ன அரும் உயிருளும் - நினைத்தற்கரிய உயிரினுக்குள்ளும்; ஒக்க - ஒரு தன்மையாக; வைகுவான் - என்றும் நீங்காது உடன் உறைகின்ற பரம்பொருளாகிய இராமன்; பொன் நிறத் திருவொடும் குடி புக்கான் - பொன்னிறம் படைத்த இலக்குமியின் அவதாரம் ஆகிய சீதையோடும் குடி புகுந்தான்.
பிரமன் நெஞ்சிலும், உயிரிலும் உறைபவன் இச் சிறிய சாலையில் அவதார நிமித்தம் குடிபுகுந்தான் என்றது அரியனாய் எளியனாம் அவனது சௌலப்யத்தைக் காட்டியது. அரோ' அசை.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Into the hut his younger brother had built in this way,
- with Tiru of golden hue he went to dwell: he
- who dwells alike in the heart of the good, great four-faced god
- and within the lives of such as we are, beyond all thought.
What the poem says
Irāmaṉ and Cītai, here called Tiru (Lakṣmī) of golden complexion, move into the hut.
The poet points to the paradox. The supreme god who lives in the heart of Brahmā, the four-faced creator, and within every living being in ways beyond our thought, has chosen to live in a little thatched hut. The commentary names this quality cauḷabhya: the Lord's readiness to make himself easy to reach though he is beyond reach.