கம்பராமாயணம் 2190 · அயோத்தியா 9.13
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
வில்லின் வேதியர் - வில் வித்தைக்குரிய நூலில் தேர்ச்சியடைந்தவர்களும்; வாள்செறி வித்தகர் - வாட்போர் புரிவதில் திறமை உடையவரும்; மல்லின் வல்லார் - மல்சண்டையில் வலிமை படைத்தவரும்; சுரிகையின் வல்லவர் - குற்றுடைவாளை வீசுதலில் வல்லவர்களும்; கொல்லும் - (பிறரை) அழிக்கின்ற; வேல் குந்தம் கற்று உயர் கொற்றவர் - வேல் ஈட்டி ஆகிய படைகளை வீசக் கற்று உயர்ந்த வெற்றியாளர்களும்; தொல்லை - பழமையான (அனுபவம் மிக்க); வாரணப் பாகரும் - யானை ஓட்டுநரும்; சுற்றினார் - சூழ்ந்து வந்தார்கள்.
வேதம் வல்லவர் வேதியர். இங்கு வில் வேதம்; தனுர் வேதம் என்று வடமொழியிற் குறிப்பிடுவர். கொல்லும் வேல் உபசார வழக்கு.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Masters of the science of the bow, skilled swordsmen,
- mighty wrestlers, men expert with the dagger,
- victors who had trained and excelled with the killing spear and lance,
- and seasoned elephant-drivers gathered round him.
What the poem says
The fighting men of the escort: archers who know the "Veda of the bow" (dhanurveda, the science of archery), swordsmen, wrestlers, dagger fighters, spearmen and lancers, and veteran elephant drivers.
"Killing spear" is a figure of speech: it is really the man who wields it who kills.