கம்பராமாயணம் 2192 · அயோத்தியா 9.15
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
நெருங்கினர் நிறைந்த மாந்தர் - ஒருவரோடு ஒருவர் நெருங்கிய அறிவால் நிறைந்த மக்கள்; நெஞ்சினில் - தம் மனத்தில்; “பறந்து போதும் கொல்” என்று - பறந்து சென்று விடுவோமா (அயோத்திக்கு) என்று கருதி; பதைக்கின்றார் - துடிக்கின்றார்; (இவர்கள்) தேவர் - தேவர்கள்; பிறந்து - சாபத்தால் மண்ணிற் பிறந்து; உணர்ந்து - பாச நீக்கத்தால் (அறிவுணர்ந்து) தாம் தேவர் என அறிந்து; பெயர்ந்து - இம்மண்ணுலகை விட்டு நீங்கி; முன் உறைந்த வான் - தாம் முன்பு வாழ்ந்த தேவருலகை; உறுவார்களை - அடைய விரைகின்றவர்களை; ஒக்கின்றார் - ஒப்பவராய் உள்ளார்கள்.
சாப நீக்கம் தேவர்கள் தம் வான் உலகு செல்லத் துடித்தலும் விரைதலும் பரதன் உடன் செல்வார் அயோத்திக்கு விரைந்து செல்லத் துடித்தலுக்கு உவமை. இவர்களின் பதைப்பையும் விரைவையும் “பறந்து போதும்” என்பது விளக்கும். “கொல்' ஐயம்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- The crowding people, their hearts full,
- quiver with the thought, 'Could we fly there?';
- they were like gods who, born on earth under a curse, come to know themselves and, leaving,
- hasten back to the heaven where they once dwelt.
What the poem says
Everyone travelling with Paratan longs to reach Ayōtti, so much that they wish they could fly there.
The poet compares them to gods who, under a curse, were born on earth as humans. When the curse ends and they remember who they are, they can hardly wait to get back to their heavenly home.