கம்பராமாயணம் 2193 · அயோத்தியா 9.16
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
மாகதர் - மாகதர்களின் பாடல்; தேன் அளைந்து - தேனோடு கலந்து; செவி உற வார்த்தென - செவியிற் பொருந்தும்படி (செவிக்கு இனிமையாக) சொரிந்தாற் போன்றனவாக; வான் அளைந்தது - வானுலகு வரை சென்று பரவியது; தண்ணுமைதான் - மத்தள வொலிதான்; ஊன் அளைந்த உடற்கு - ஊனொடு கலந்த உடலுக்கு; உயிர் ஆம் என - பொருந்திய உயிர் போல (உடல் முழுவதும் உயிர் பரவியிருப்பது போல); அளைந்து - அப்பாடல் ஒலியோடு இரண்டறக் கலந்து; தழுவின - இணைந்து நின்றன.
மாகதர் - இருந்து ஏத்துவார். அரசரை ஏத்திப்பாடும் இயல்பு உடையார் மூவர் சூதர் மாகதர் வேதாளிகர் என்பார். இவரை முறையே நின்றேத்துவார், இருந்து ஏத்துவார், கடந்து ஏத்துவார் என்பது வழக்கம். அவருள் இவர் மாகதர் ஆதலின் இருந்து ஏத்துவார். தண்ணுமை ஒலியும், பாடல் ஒலியும் ஒன்றையொன்று இணைதலுக்கு உடல் - உயிர் இணைப்பை உவமையாக்கினார். தண்ணுமை என்பது இங்கு அதன் ஒலியைக் குறித்து நின்றது. 'ஏ' ஈற்றசை.
ஆங்கிலம் · English translationAI
Translation
- As life pervades a body of flesh,
- so the drumbeat blended with it and embraced it;
- as though honey had been mixed in and poured into the ear,
- the song of the māgadha bards rose up to the sky.
What the poem says
The royal bards called māgadhas sing praises as they go. The commentary explains that of the three classes of royal panegyrists, the sūtas praise standing, the māgadhas seated, and the vaitālikas while moving.
Their song is sweet as honey poured into the ear and carries up to the heavens. The beat of the drum blends with it so completely that the two are like body and soul.