கம்பராமாயணம் 2195 · அயோத்தியா 9.18

Section அயோத்தியா காண்டம் / 9. பள்ளி படைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

(பரதன்) ஏழ் பகல் - ஏழு நாள்கள்; நீந்தி - வழி நடந்து சென்று; ஆறும் கானும் அகல் மலையும் ஏறிக் கடந்து - ஆறும், காடும், அகன்ற மலையும் ஏறித் தாண்டிச் சென்று; பின் - பிறகு; எந்திரத்து ஊறுபாகு - கரும்பாலைகளில் ஊறுகின்ற வெல்லப்பாகு; மடை உடைத்து - (வயல்களில் நீர்பாய்ச்ச உள்ள வாய்க்கால் வழிச் சென்று) மடைகளை உடைத்துக்கொண்டு; ஒள் முளை நாறு வயல் பாய் - சிறந்த முளையுடைய நாற்றுகள் பொருந்திய வயலிலே பாய்வதற்கு இடனாக உள்ள; கோசலம் - கோசல நாட்டை; நண்ணினான் - சேர்ந்தான்.

அயோத்தியிலிருந்து சென்ற பரதன் கேகய நாட்டை ஏழு நாளில் நண்ணினான் என்று முன்னர்ச் சொன்னதை (1311.) ஈண்டு நினைவு கூர்க. கான் கடந்து, மலை ஏறி, ஆறு நீந்தி என்றதற்கேற்ப, 'ஆறும் கானும் மலையும்” எனவும், 'கடந்து, ஏறி, நீந்தி' எனவும் அமைத்த அழகு அறிந்து இன்புறத்தக்கது.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Crossing rivers and forests and wide mountains,
  2. climbing, and wading on through seven days, at last
  3. he reached Kōcalam, where the syrup that oozes from the cane presses
  4. breaks through the sluices and flows into fields of bright young seedlings.

What the poem says

After seven days' travel, the same time the journey took when Paratan first went to Kēkayam, he reaches the borders of his own country, Kōcalam.

It is famous for its fertility: so much syrup flows from the sugarcane presses that it bursts the irrigation sluices and floods the rice paddies. The poet pairs the verbs neatly with the terrain: rivers waded, forests crossed, mountains climbed.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1āṟum kāṉum akal malaiyum kaṭantu
ēṟi, ēḻ pakal nīntip piṉ, entirattu
ūṟu pāku maṭai uṭaittu oṇ muḷai
nāṟu pāy vayal kōcalam naṇṇiṉāṉ.