கம்பராமாயணம் 2198 · அயோத்தியா 9.21

Section அயோத்தியா காண்டம் / 9. பள்ளி படைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1 '

பொருள் · Meaning in Tamil

சாலி - செந்நெற் பயிர்கள்; “இதற்கு ஏய்ந்த காலம் இது ஆம்” என ஆய்ந்து - இப்பயிரை விளைத்தற்கும், அறுத்தற்கும் பொருத்தமான காலம் இதுவாகும் என்று ஆராய்ந்து; அரிகுநர் - அரிகின்றவர்களாகிய; மள்ளர் இன்மையால் - உழவர்கள் அத்தொழில் புரிபவராய் இல்லாமையால்; பாய்ந்த - (பறிப்பார் இல்லாமையால்) சிந்தி அழிந்த; சூதப் பசு நறுந் தேறலால் - மாம்பழத்தின் நல்ல இனிய சாற்றினால்; சாய்ந்து - தலை சாய்ந்து; ஒசிந்து - வளைந்து அடி முறிந்து; முளைத்தன - (தம் தானியங்கள் கீழே விழ மீண்டும்) முளைத்தன.

தேறல் - மது, இங்கு அது போன்ற மாம்பழச் சாற்றை உணர்த்தியது. காலம் கருதிப் பயிரை அறுக்காத போது அவை மீண்டும் நிலத்திற் சிந்தி முளைத்ததாகக் கூறினார். மள்ளர் சோதித்தலின் அறுத்திலர் என்க. 'ஏ' ஈற்றசை.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Because no farmhands came to reap it, judging,
  2. 'This is the season fit for it,'
  3. drenched by the fresh, sweet mango juice that flowed over it,
  4. the paddy bent, broke and sprouted again where it fell.

What the poem says

With no farmhands to judge the right time and reap the harvest, the ripe rice is left standing.

Soaked by juice from rotting mangoes, the stalks bend over and break, and the grain spills onto the ground and sprouts all over again.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'ēynta kālam itu, itaṟku ām ' eṉa
āyntu maḷḷar arikunar iṉmaiyāl,
pāynta cūtap pacu naṟun tēṟalāl
cāyntu ocintu muḷaittaṉa cāliyē.