கம்பராமாயணம் 2199 · அயோத்தியா 9.22
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
எள் குலா மலர் - எள் அழகு விளங்கும் மலரை; ஏசிய - (தன் அழகால்) பழித்த; நாசியர் - மூக்கை உடையவராகிய; புள்குலா வயல் - பறவைகள் மகிழ்ந்து திரிகின்ற வயலிலே; பூசல் - தொழில் செய்கின்ற; கடைசியர் - உழத்தியர்; காதல் கொழுநரோடு - தம்மால் அன்பு செய்யப்பெற்ற கணவரோடு; உள்கலாம் உடையாரின் - உள்ளே பிணக்கு உடையாரைப்போல்; களை கட்கிலார் - களை பறிக்காதவர்களாய்; உயங்கினார் - வாடிக்கிடந்தார்.
கணவரோடு ஊடிய மகளிர் தொழில் செய்ய விருப்பமின்றி இருத்தல் போலக் களைபறியாமல் இருந்தனர் கடைசியர். எள்மலர் - மூக்கிற்கு உவமை. பூசல் - ஒலி - ஈண்டு ஒலிக்கு இடனாகிய தொழிலைக் குறித்தது; இலக்கணை என்பர்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- The farm women, whose noses put to shame the lovely sesame flower,
- who work with noisy song in the fields where birds rejoice,
- did not pull the weeds; like women nursing a secret quarrel
- with the husbands they love, they drooped.
What the poem says
The women who work the fields, whose noses are finer than the sesame flower, the classic comparison, sit idle and leave the weeds unpulled.
They are as listless as wives who have quarrelled with their husbands and have no heart for anything. The noisy work songs of the fields have fallen silent.