கம்பராமாயணம் 2201 · அயோத்தியா 9.24
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
கிள்ளையும் - கிளிகளும்; ஓதுகின்றில - பேசுதல் ஒழிந்தன; ஓதியர் - கூந்தலையுடைய மகளிர்; தோழர்பால் - காதல் தோழர்கள் இடத்தில்; தூது சென்றில - (அப்பறவைகள்) தூது செல்லவில்லை; வந்தில - (அவர் சொல்லுடன்) மீண்டு வருதலையும் செய்யவில்லை; பேரி - பெரு முரசும்; முழா - முழவும்; மோதுகின்றில - அடித்து முழக்கப்படாதொழிந்தன; பொன் அணி வீதி - பொன்னால் அழகு செய்யப்பெற்ற வீதிகளில்; விழாப் போதுகின்றில - விழா ஊர்வலங்கள் செல்லவில்லை.
ஓதுகின்றில - வேதம் சொல்லுதலை ஒழிந்தன என்றும் பொருள். வேதம் ஓதும் சிறார் உரைப்பது கேட்டுக் கிளிகளும் வேதம் ஓதும். “வளைவாய்க் கிள்ளை மறை விளி பயிற்றும் (பெரும்பாண்.....300) என்பது காண்க. இராமன் பிரிவால் “கிள்ளையொடு பூவை அழுத ” (1701) என முன்னர்க் கூறினார் ஆதலின் அதற்கேற்ப இங்கே “கிள்ளையும் ஓதுகின்றில' என்றார். பறவைகள் காதலர் இடையே தூது செல்லும் ஆதலின், அச்செயல் நிகழவில்லை. எனவே இன்பம் இழந்தது நாடு என்றார். ஏ ஈற்றசை.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Even the parrots no longer recite; for the women with lovely tresses
- they no longer carry messages to their lovers, nor come back;
- the great drums and tabors are not beaten; no festival
- processions pass along the gold-adorned streets.
What the poem says
Even the pet parrots have fallen silent. They used to repeat the Vedic chants they heard the boys reciting and carry love messages between women and their lovers; now they do neither.
No drums are beaten, and no festival processions pass through the golden streets. Earlier, when Irāmaṉ left, the poet said the parrots and mynas wept; now they are silent.