கம்பராமாயணம் 2203 · அயோத்தியா 9.26

Section அயோத்தியா காண்டம் / 9. பள்ளி படைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1நகை இழந்தன வாள் முகம் ; நாறு அகில்
புகை இழந்தன மாளிகை ; பொங்கு அழல்
சிகை இழந்தன தீவிகை ; தேம் மலர்த்
தொகை இழந்தன தோகையர் ஓதியே .

பொருள் · Meaning in Tamil

வாள்முகம் - (கோசல நாட்டவரது) ஒளி படைத்த முகங்கள்; நகை இழந்தன - மகிழ்ச்சிச் சிரிப்பை இழந்தன; மாளிகை - (அந்நாட்டு) மனைகள்; நாறு அகில் புகை இழந்தன - மணம் வீசுகின்ற அகிற்புகை இழந்தன; தீவிகை - (ஏற்றிய) தீபவிளக்குத் தண்டுகள்; பொங்கு அழல் சிகை இழந்தன - மேல் நோக்கி எரியும் நெருப்புச் சுடரை இழந்தன; தோகையர் ஓதி - மகளிரின் கூந்தல்; தே மலர்த் தொகை இழந்தன - தேன் பொருந்திய மலர்த் தொகுதிகளை இழந்தன.

“இழந்தன என்பது நான்கு முறை ஒரு பொருளிலேயே வருதலின் 'சொற்பொருட் பின்வருநிலையணி: தீவிகை என்பது 'தீபிகா' என்னும் வட சொல்லின் தமிழ் வடிவம். பெண்கள் கூந்தலில் மலர் சூடவில்லை என்பதை “ஓதி மலர்த்தொகை இழந்தன' என்றார். 'ஏ' ஈற்றசை.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Bright faces had lost their smiles; the mansions had lost
  2. the fragrant smoke of their rooms; the lamps had lost
  3. their leaping tongues of flame; the tresses of the peacock-like women
  4. had lost their clusters of honeyed flowers.

What the poem says

One word, "lost", is repeated four times in the same sense, a figure the commentary names coṟporuṭ piṉvarunilai.

Faces have lost their smiles, homes have lost the scented smoke of aloeswood, lamps stand unlit, and women no longer put flowers in their hair.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1nakai iḻantaṉa vāḷ mukam; nāṟu aṟai
pukai iḻantaṉa māḷikai; poṅku aḻal
cikai iḻantaṉa tīvikai; tē malart
tokai iḻantaṉa tōkaiyar ōtiyē.