கம்பராமாயணம் 2206 · அயோத்தியா 9.29

Section அயோத்தியா காண்டம் / 9. பள்ளி படைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

மெய் எனும் நல் அணி பூண்ட அவ் வேந்தன் - வாய்மை என்னப் பெறுகின்ற சிறந்த அணியை அணிந்துகொண்ட அந்தத் தயரதனுடைய; திருமகன் - சிறந்த மகனாகிய பரதன்; மீண்டும் ஏகி - மேலும் சென்று; புந்திதான் - அறிவானது; தூண்டு தேரினும் - விரைவாகச் செலுத்தப்படுகின்ற தேரைக் காட்டிலும்; முந்துற - முற்பட்டுச் செல்லும்படி; தூண்டுவான் - அறிவை முற்படச் செலுத்தி ஆராய்பவனாக; நீண்ட வாயில் - நெடிதுயர்ந்த வாயிலை உடைய; நெடுநகர் - சிறந்த அயோத்தி நகரை; நோக்கினான் - உள்உணர்வோடு பார்த்தான்.

நாடு பொலிவிழந்த நிலை கண்ட உண்டாகிய துன்பம் அவன் புத்தியை விரைவாகச் செலுத்தியது. ஆதலின் விரைந்து நகர்வாயிலை அடைந்தான்.

அயோத்தியின் 'வைஜெயந்தம்' என்ற பெயருடைய மேற்கு வாயிலைப் பரதன் அடைந்தான் என்று வான்மிகம் கூறும்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Going on again, the son of that king who wore
  2. the fine ornament called truth, urging his mind on
  3. faster even than his speeding chariot,
  4. looked upon the great city with its towering gates.

What the poem says

Paratan, son of the king whose ornament was truth, drives on towards Ayōtti, his mind racing ahead of his chariot as he tries to work out what has gone wrong.

He reaches the great city with its lofty gates; Vālmīki's version names the western gate Vaijayanta.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1mīṇṭum ēki, am mey eṉum nal aṇi
pūṇṭa vēntaṉ tiru makaṉ, puntitāṉ,
tūṇṭu tēriṉum muntuṟat tūṇṭuvāṉ,
nīṇṭa vāyil neṭu nakar nōkkiṉāṉ.