கம்பராமாயணம் 2207 · அயோத்தியா 9.30
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
ஒண் கதிர்ச் செல்வனை - ஒளி படைத்த ஆயிரம் கதிர்களைத் தன் செல்வமாக உடைய கதிரவனை (நோக்க), “அண்டம் முற்றும் - எல்லா உலகங்களும் அடங்க; திரிந்து அயர்ந்தாய் - (நீ) சுற்றி அலைந்து சோர்ந்து போனாய்; அமுது உண்டு போதி - (எங்கள் நகரிலே) தங்கி உணவு அருந்திச் செல்வாயாக, என்று -; விண்தொடர்ந்து - (அக் கதிரவன்) செல்லும் வான் அளாவித் தொடர்ந்து சென்று; விலக்குவ போல்வன - (அப்பரிதியைத்) தடுப்பன போல்வனவாகிய; கொடியின் - (அயோத்தி நகரக்) கொடிகளின்; நெடுங்கானம் - பெரிய காட்டை; கண்டிலன் - (பரதன்) காணப்பெறாதான் ஆனான்.
அந்நகரத்துப் பலவிடங்களிலும் முன்பு கொடிகள் இருந்தமையும் இப்போது இல்லாமையும் கூறப்பட்டன. வானளாவக் கொடிகள் உயர்ந்திருப்பதும் தடுத்தாற்போல அசைவதும், சூரியன் செலவைத் தவிர்த்துச் சோர்வு நீக்கி உண்டு இளைப்பாறிச் செல்ல நகர்க்கு அழைப்பதாகக் கற்பனை செய்யப்பெற்றது. இது தற்குறிப்பேற்றவணி. கானம் - கொடிகளின் மிகுதி - 'காடு' என்னும் பொருள் இங்கே தொகுதி எனப் பொருள்பட்டது, மரங்களின் தொகுதி காடு ஆதலின். 'ஏ' ஈற்றசை.
ஆங்கிலம் · English translationAI
Translation
- 'You have wandered the whole universe and are weary; take food
- before you go on': so, as if following the bright-rayed lord
- up into the sky to hold him back,
- rose the vast forest of banners; he did not see it.
What the poem says
A series of verses describes Ayōtti by what Paratan does not see or hear.
The city used to fly so many tall banners, a whole forest of them, that they seemed to reach the sky and wave to the sun, inviting him to stop, rest from his endless journey across the universe, and eat before going on. Now not one banner is flying.