கம்பராமாயணம் 2208 · அயோத்தியா 9.31
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
“ஈட்டிய யாவையும் - தேடித் தொகுத்த எல்லாச் செல்வங்களையும், நல்புகழ் ஈட்டுக்கு - நல்ல புகழைப்பெறுதற்கு; வேட்ட - தாம் விரும்பியவற்றை; வேட்டவர் - விரும்பியவர்கள்; விரைந்து கொண்மின்” - விரைவாக வந்து வாங்கிக்கொள்ளுங்கள்; என - என்று; கோட்டி மாக்களை - கூட்டமாக உள்ள மக்களை; கூவுவபோல்வன - கூவி அழைப்பன போல்வனவாகிய; முரசின் கிளர் ஓதை - கொடை முரசின் செருக்கிய ஒலியை; கேட்டிலன் - (பரதன்) கேட்கப் பெற்றிலன்.
கொடை முரசு ஒலித்தலை இரவலர்களைக் கூவி அழைத்தல் போலும் என்றது தன்மைத்தற்குறிப்பேற்ற அணி. கோட்டி - அவை, மக்கள் கூட்டம் உள்ள இடம். இங்கே மக்கள் திரள் என்பதாயிற்று. “என்னும் குறளில் “கோட்டி என்பது அவை என்னும் பொருள்படல் அறிக. (குறள் 401).
ஆங்கிலம் · English translationAI
Translation
- 'All that has been gathered to win good fame,
- take whatever you wish, all who wish, and quickly!':
- as if calling so to the gathered crowds,
- the stirring boom of the drum: he did not hear it.
What the poem says
Ayōtti used to resound with the drum of royal giving, beaten to announce that the king's treasures were open to anyone who came, so that his fame for generosity might grow.
The drumbeat seemed to call out, "Come quickly and take whatever you want!" Now Paratan hears no such drum.