கம்பராமாயணம் 2209 · அயோத்தியா 9.32
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
மா - வண்டுகள்; கள்ளை கவர் கண்ணியன் - தேனை உண்கின்ற மலர் மாலையை அணிந்தவனாகிய பரதன்; வள்ளை மாக்கள் - (அரசனை வாழ்த்திப் பாடும்) மங்கலவள்ளைப் பாடகரும்; வயிரியர் - யாழ் முதலிய இயங்களாற் பாடுகின்றவர்களும்; பிடி ஈட்டமும் - பெண்யானைத் திரளையும்; நிதியும் - செல்வத்தையும்; கொள்ளை மாக்களின் - கொள்ளையடித்துக் கொண்டு போகின்ற திருடர்களைப் போல; கொண்டனர் ஏக - பரிசிலாகப் பெற்றுக் கொண்டு செல்ல; கண்டிலன் -.
பிள்ளை, மாகளிறும், பிடியும் என்று பிரித்துக் கன்றும், யானையும், பிடியும் எனவும் பொருள் உரைக்கலாம். வயிரியர் - பாணர் - வாத்திய இசைஞர் என்பது பொருள். அளவறியாது வாரிக்கொண்டு செல்வது திருடர் இயல்பு. அதனை ஈண்டுப் பரிசிலர்க்கு உவமை ஆக்கினார்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- He whose garland the bees plunder for honey did not see
- young bull elephants and herds of cow-elephants
- and treasure carried off, as if by plunderers,
- by the singers of auspicious songs and the musicians as they went.
What the poem says
Nor does Paratan see the court singers and musicians leaving the palace loaded with royal gifts, young elephants, herds of cow elephants and treasure, carrying off so much that they look like looters.
That scene, once a daily sign of the king's generosity, has vanished.