கம்பராமாயணம் 2210 · அயோத்தியா 9.33
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
காவல் மன்னவன் - (உலகத்தைக்) காத்தலைச் செய்கிற தயரத மன்னவனது; கான்முளை - வழித் தோன்றலாகிய பரதன்; பூவின் வானவர் - மண்ணுலகத் தேவர்கள் ஆகிய பூசுரர் எனப் பெறும் வேதியர்; ஆவும் - பசுக்களும்; மாவும் - குதிரைகளும்; கவுள் அழி வேழமும் - கன்னத்தில் மதம் பெருகுகின்ற யானையும்; காதல் மேவு - ஆசை பெருகுகின்ற; நிதியின் வெறுக்கையும் - செல்வத்தின் மிகுதியும்; கொண்டனர் போக - தானமாகப் பெற்றுக்கொண்டு செல்ல; கண்டிலன் -.
கான்முளை - மகனைக் குறிக்கும் சொல்; தந்தையின் காலில் முளைத்தவன் என்பது பொருள் ஆதலின் வழித்தோன்றல் என உரை கூறப்பட்டது. அழிதல் - பெருகுதல் என்னும் பொருட்டு “அழியும்புனல் அஞ்சன மா நதியே” என்னும் சிந்தாமணியில் அப்பொருளாதல் (சீவக. 1193) காண்க. “ஏ' ஈற்றசை.
ஆங்கிலம் · English translationAI
Translation
- The scion of the guardian king did not see
- cows and horses and elephants with rut streaming down their cheeks,
- and the heaped-up wealth that all men long for,
- being carried away by the gods of the earth.
What the poem says
Nor does he see the Brahmins, "gods on earth", leaving with the gifts of cows, horses, elephants and treasure that the king used to give them.
Paratan is called the kāṉmuḷai of the king, literally "sprout from the foot", an old word for a son or descendant.