கம்பராமாயணம் 2211 · அயோத்தியா 9.34
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
பொருநர் குழாங்கள் - பாடி ஆடுகின்ற பொருநர் கூட்டங்களில் உள்ள; சூழ் அமைந்த சுரும்பும் - (மணம் உள்ளவிடத்தே) சுற்றுதல் பொருந்திய வண்டுகளும்; நரம்பும் - நரம்பினால் இசைக்கும் யாழ் முதலிய கருவிகளும்; ஏழ் அமைந்த - ஏழாகப் பொருந்திய; தம் இசை இசையாமையால் - தமக்குரிய இசையை ஒலிக்காமல் வெறுமனே கிடக்கிறபடியால்; மாழை உண்கண் மயில் எனும் சாயலார் - இளமைத் தன்மையாகிய அறியாமையுடைய மையுண்ட பார்வையுடையவரும் மயிலைப் போலும் சாயலுடையவரும் ஆய மகளிர்; கூழை - தலைக் கூந்தலை; போன்ற - போன்றன.
கூந்தல் கருநிறம் உடையது. நரம்பு போலும் தோற்றம் உடையது. இசை இசைக்காது - இசைஇசையாத கருநிறம் உடைய வண்டுகளும், நரம்புடைய யாழும் அது போன்றன என்றார். ஏழ் அமைந்த இசை - குரல், துத்தம், கைக்கிளை, உழை, இளி, விளரி, தாரம் என்னும் எழுவகைச் சுரத்தானங்கள், சரிகம பத நி எனலும் ஆம். மாழை - இளமை என்னும் பொருட்டு. அது இளமைத்தன்மையாகிய அறியாமையைக் குறித்தது. “மாழை மான் மட நோக்கி உன் தோழி” (திவ்வியப். /418) என்பது இங்கு ஒப்பு நோக்கத் தக்கது. “ஏ' ஈற்றசை.
ஆங்கிலம் · English translationAI
Translation
- The circling bees and the lute strings of the minstrel troupes,
- because they no longer sounded their music of seven notes,
- were like the tresses of women with soft, kohl-darkened eyes
- and the grace of peacocks.
What the poem says
The music of Ayōtti has stopped. The minstrels' lutes lie silent, and even the bees no longer hum.
The poet finds a strange likeness: the dark, silent bees and the thin, mute lute strings now resemble a woman's black hair, dark and fine as thread but making no sound. The "seven notes" are the seven tones of the Tamil scale, kural, tuttam and the rest, matching sa ri ga ma pa da ni.